இலங்கை வீரர் ஒருவர் உலக தரவரிசையில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க என்ற வீரரே ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் 5 சிறந்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் நிறைவடைந்த சில போட்டித் தொடர்களில் குறித்த வீரர் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளால் உலகத் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளார்.
இதற்கமைய, 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளைப் பெற்று, உலக தரவரிசையில் அவர் 5 ஆம் இடத்தை உறுதி செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (01) மொரோக்கோவில் நடைபெற்ற 'ரபாத் டைமண்ட் லீக்' தொடரில், 85.97 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
அவரது இந்தச் சிறப்பான திறமையே உலகத் தரவரிசையில் முன்னோக்கி நகர காரணமாக அமைந்துள்ளது.
ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ஜேர்மனியின் வீரரான ஜூலியன் வெபர் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதனை படைத்த இலங்கை வீரர் - உலக தரவரிசையில் 5ஆவது இடம் இலங்கை வீரர் ஒருவர் உலக தரவரிசையில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க என்ற வீரரே ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் 5 சிறந்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.சமீபத்தில் நிறைவடைந்த சில போட்டித் தொடர்களில் குறித்த வீரர் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளால் உலகத் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளார். இதற்கமைய, 1,287 சராசரி செயல்திறன் புள்ளிகளைப் பெற்று, உலக தரவரிசையில் அவர் 5 ஆம் இடத்தை உறுதி செய்துள்ளார்.கடந்த திங்கட்கிழமை (01) மொரோக்கோவில் நடைபெற்ற 'ரபாத் டைமண்ட் லீக்' தொடரில், 85.97 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். அவரது இந்தச் சிறப்பான திறமையே உலகத் தரவரிசையில் முன்னோக்கி நகர காரணமாக அமைந்துள்ளது.ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ஜேர்மனியின் வீரரான ஜூலியன் வெபர் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.