நாசிவன் தீவு கிராமசேவகரை தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளதை கண்டித்தும், அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் நீதி வேண்டி இன்று (23) வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச நலன் புரி சங்கத்தின் சார்பாக இவ் கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள வாழைச்சேனை பிரதான வீதியில் ஒன்று கூடிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,' 'தாக்காதே தாக்காதே அரச ஊழியர்களை தாக்காதே,' 'கைது செய்,கைது செய் குற்றவாளிகளை கைது செய்' என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் அகியோர்கிளிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி குற்றவாளிகளை கைது செய்வதில் அயராது முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இரவு பகலாக பொலிஸ் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் சரணடையாமல் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
விரைவில் அவர்களை கைது செய்வேன் என்றும் தெரிவித்தார்.
அவரது பதிலை கேட்டறிந்து கொண்டவர்கள் போராட்டத்தை இடை நிறுத்தி அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றனர்.
அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான அரச சேவையை மேற்கொள்ளும் போது ஒரு சிலரால் தாக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தங்களது சேவையை திறன்பட மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவிக்கின்றனர்.
குற்றவாளிகள் இன்றுடன் 4 நாட்கள் கடந்தும் கைது செய்யப்படவில்லை அவர்களை விரைவில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.
கடந்த (20) ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோறளைப்பற்றில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நாசிவன் தீவு கிராமசேவகரை தாக்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளதை கண்டித்தும், அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் நீதி வேண்டி இன்று (23) வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.கோறளைப்பற்று பிரதேச நலன் புரி சங்கத்தின் சார்பாக இவ் கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள வாழைச்சேனை பிரதான வீதியில் ஒன்று கூடிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.'வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,' 'தாக்காதே தாக்காதே அரச ஊழியர்களை தாக்காதே,' 'கைது செய்,கைது செய் குற்றவாளிகளை கைது செய்' என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினார்கள்.இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் அகியோர்கிளிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.மகஜரை பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி குற்றவாளிகளை கைது செய்வதில் அயராது முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இரவு பகலாக பொலிஸ் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் சரணடையாமல் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.விரைவில் அவர்களை கைது செய்வேன் என்றும் தெரிவித்தார். அவரது பதிலை கேட்டறிந்து கொண்டவர்கள் போராட்டத்தை இடை நிறுத்தி அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றனர்.அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான அரச சேவையை மேற்கொள்ளும் போது ஒரு சிலரால் தாக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தங்களது சேவையை திறன்பட மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவிக்கின்றனர்.குற்றவாளிகள் இன்றுடன் 4 நாட்கள் கடந்தும் கைது செய்யப்படவில்லை அவர்களை விரைவில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.கடந்த (20) ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் வெளிக்கள கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.