• Nov 25 2024

மின்சாரசபை மறுசீரமைப்பு அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே நன்மை அளிக்கிறது - .சாணக்கியன் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Jan 5th 2024, 1:53 pm
image

மின்சாரசபை மறுசீரமைக்கப்படவேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்கவேண்டும் மாறாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நேற்றைய தினம் செய்தியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராகுவதாகவும் அதற்கான காரணம் இலங்கையை மின்சார சபையில் இருக்கும் சில பிரிவுகளை ஆறாகப் பிரித்து தனியார் மையப்படுத்தல் கம்பெனிகளாக பதிவு செய்து தனியா மயமாக்கல் செய்யப்பட போவதாக ஒரு விடயத்தினை முன்வைத்து தாங்கள் தொழிற்சங்கர் நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவ்வாறான சட்டங்கள் பாராளுமன்றத்தில் வந்தால் தாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஈடுபட போவதாக செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது.

உண்மையில் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இரண்டும் உண்மையில் மறு சீரமைக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் அதாவது இந்த இரண்டு அமைப்புகளும் தங்களுடைய வருமானத்தை செலவுகளை பார்த்து மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மக்கள் மீது இலங்கையிலே வரி கட்டுகின்ற சாதாரண மக்கள் மீது அந்த சுமையை போடாமல் ஏதாவது ஒரு மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவது உண்மையிலே ஆராயப்பட வேண்டிய விடயம்.

ஆனால் இன்று இலங்கை மின்சார சபையில் இருக்கின்ற இந்த ஊழியர்கள் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பிரதான காரணம் இந்த மின்சார சபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அவற்றிற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் காஞ்சன விஜயசேகர அவர்களுடைய வெளிப்படை தன்மை இல்லாத காஞ்சன விஜயசேகர அவர்களுடைய செயல்பாடுகள் கடந்த காலத்திலே வெளிப்படை தன்மை இல்லாமல் இதில் ஊழல் மோசடிகள் நடக்கலாம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் அந்த ஊழியர்களுக்கு இருப்பதன் காரணத்தினால் தான் இன்று இந்த பாடிய ஆர்ப்பாட்டங்கள் அல்லது பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்கும் ஒரு அசைவுகளையும் வரக்கூடிய வகையான செயல்பாடுகள் நடக்கக்கூடிய சூழல் அமைந்திருக்கின்றது.

இன்று இந்த இலங்கை மின்சார சபையில் ஒவ்வொரு வருடமும் அதில் இருக்கின்ற செலவுகள் அதில் கொடுக்கப்படுகின்ற சம்பளங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் நாங்கள் எழுப்பலாம். இது தொடர்பாக சரியாக ஆராயப்பட வேண்டும் இலங்கையில் இருக்கின்ற நட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு நட்டம் வராத வகையிலே இலங்கை மின்சார சபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றை நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அதனை மறுசீரமைத்து மேல் கட்டமைப்பின் ஊடாக தனியார் பயன்படுத்துதல் என்றாலும் கூட சரியான முறையில் நடக்கின்றதா என்கிற சந்தேகம் நடக்கப்பட வேண்டிய விடயங்கள் சரியாக நடக்கின்றதா என்கிற சந்தேகம் இன்று அனைவரும் மத்தியில் இருக்கின்றது ஏன் எனக்கும் இருக்கின்றது.

கடந்த பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்ற போது நாங்கள் இதைப் பற்றி பேசி இருந்தோம் உண்மையில் அவசர மின் சக்தி வாங்கியதில் பல சந்தேகங்கள் காணப்படுகின்றது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நூற்றுக்கு மேலதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபாக் நிறுவனத்திற்கு ஒரு ரூபாய் கூட பணம் வரவிடாமல் இலவசமான முறையில் குத்தகைக்கு கொடுத்துள்ளனர் இதனை விற்றுஇருக்கின்றார்கள் இதில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வரவேண்டிய வருமானம் வரவில்லை.

2003 ஆம் ஆண்டு ஐஓசி நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கும் போது இலங்கை அரசாங்கத்திற்கு அந்த நேரம் 75 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தினை பெற்று விட்டு தான் கொடுத்தார்கள் ஆனால் இன்று சினோபக் நிறுவனத்திற்கு அளவீடு இல்லாமலே கொடுத்திருக்கின்றார்கள்.

அவ்வாறான ஒரு நிலை இருக்கின்றபோது இந்த அமைச்சரனுடைய செயல்பாடுகளை பற்றி பாரிய சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றது இந்த சந்தேகங்களின் உடைய வழிபாடு தான் இன்று இலங்கை மின்சார சபையின் உடைய அதிகாரிகள் ஊழியர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு வந்திருக்கின்றது.

மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் என்று கூறியது நாள் தான் இன்று மக்களுக்கு இந்த நிறுவனத்துக்குள்ளே இவ்வாறான பிரச்சனைகள் இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது ஆனால் நேற்றைய தினம் மின்சார சபையிலே நிறைவேற்று பணிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையிலே எவ்வாறு காணப்படுகின்றது என்று சொன்னால் மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்களோ அல்லது வேலை செய்பவர்களோ இந்த விடயத்தொடர்பாக இது விதமான கருத்துக்களும் ஊடகங்களுக்கு தெரிவிக்க கூடாது எதுவிதமான கருத்துகளும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட கூடாது பதிவு பகிரக்கூடாது என இன்று இந்த மின்சார சபையிலே வேலை செய்கின்ற ஊழியர்களை அடக்குமுறைக்குள்ளே கொண்டு செல்கின்றார்கள் ஒருவருக்கும் தெரியாமல் தாங்கள் செய்யப் போகின்ற ஊழல் மோசடிகளுக்கு இவர்கள் வாய் திறக்க கூடாது என்று இவர்களை அடக்குவதற்கான வேலையை இவர்கள் செய்திருக்கின்றார்கள்.

இன்று இந்த நாட்டிலே இடம்பெறுகின்ற பிரச்சனைகள் இன்று நாட்டில் நடக்கும் அநீதிகள் மக்களுக்கு தெரிவதற்கான காரணங்கள் இந்த ஊடகங்கள் ஊடாகத்தான் சமூக வலைத்தளங்களின் ஊடாக இலங்கை மின்சார சபையிலே இருக்கின்ற ஊழியர்கள் உண்மையான நிலவரங்களைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தாவிட்டால் நாங்கள் எங்கு சென்று அறிவது அதேபோன்றுதான் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய தலைசாலர் வஜ்ர அபேஷேகர அடிக்கடி தெரிவிக்கின்றார் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டும் சமூக வலைத்தளங்கள் ஆபத்து என்று அவரும் இந்த செய்தியை கூறுவதைப் பார்த்தால் நிச்சயமாக இவர்களுக்கு மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழும்ப கூடிய வகையிலான விடயங்களை கட்டுப்படுத்த வேண்டும் அடக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கின்றார்கள்.

ஏனென்றால் இன்று மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் வீதியில் இறங்கி செல்ல முடியாத சூழ்நிலை நேற்று பார்த்திருப்பீர்கள் எஸ்.எம் சந்திரசேன ஒரு அமைச்சராக இருந்தவர் அவர் அனுராதபுரத்தில் உள்ள தம்புத்தேகம என்கின்ற பிரதேசத்தில் போக முடியாத ஒரு சூழல் ஏனென்றால் மக்கள் அவரை விரட்டி அடித்த சூழல் ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறான எதிர்ப்புகள் காணப்படுகின்றது.

இன்று இந்த எதிர்ப்புகளை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கான பயத்தில்தான் இவர்கள் இந்த ஊடகங்களை அடக்க வேண்டும் சமூக வலைத்தளங்களை அடக்க வேண்டும் என்கின்ற சிந்தனையில் இருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது ஏனென்றால் இன்று ஒரு தேர்தல் நடந்தால் இன்று இவர்களுக்கு பாரிய தோல்வி ஏற்படும்.

ஏனென்றால் நாங்கள் வரி அதிகரிப்பை பார்த்தால் இன்று பிள்ளைகள் படிக்கின்ற சாதாரண கொப்பிக்கு கூட இன்று வரி போடப்பட்டுள்ளது 18மூ ஐந்து பிள்ளைகள் இருக்கின்ற வீட்டில் எவ்வாறு அவர்கள் படிப்பது.

இன்று பால்மாவிற்கு விலை அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது இவ்வாறு எல்லா விடயங்களிலும் அரசாங்கம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு செல்லும்போது ஒரு தேர்தல் வந்தால் தாங்கள் படுதோல்வி அடைய வேண்டும் ஆனால் எவ்வாறாவது இந்த ஊடகங்களை கட்டுப்படுத்தி இந்த செய்திகள் வெளியில் செல்லாமல் மட்டுப்படுத்துவதனூடாக தாங்கள் ஒரு தேர்தலை வெல்லலாம் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய சூழலை அமைத்துக் கொள்ளலாம் என்கின்ற சிந்தனையில் தான் இன்று இவர்கள் இந்த விடயங்களை தடை செய்கின்றார்கள்.

உண்மையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அதை நாங்கள் உண்மையிலேயே எவ்வாறு செய்வது அதனை மறுசீரமைப்பு செய்வதன் ஊடாக தனியாருடன் சேர்ந்து வேலை செய்வதன் ஊடாக இலங்கை மக்களுக்குத் தான் அதனுடைய லாபங்கள் வரவேண்டுமே தவிர அமைச்சருக்கோ அமைச்சர் சார்ந்தோருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அரசாங்கத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாக ஒரு விடயமாக நாங்கள் இதை வருவதை அனுமதிக்க முடியாது.

உண்மையில் கடந்த காலத்தில் வட் சில பொருட்களுக்கு அறவிடப்படவில்லை அதாவது நான் நினைக்கின்றேன் உதாரணமாக பால் மா,  அப்பகயாச கொப்பிகள், புத்தகங்கள் இவ்வாறான விடயங்களுக்கு இதுவரை காலத்திற்கு 18 வீத வரிகள் அறவீடு செய்யவில்லை அதாவது வட் பூச்சிய விதத்தில் இருந்தது இப்போது எடுக்காத பொருட்களுக்கு புதிதாக எடுப்பதற்கு ஆரம்பிக்கின்றார்கள் இதனால் 18 வீதத்தினால் விலைகள் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் நமது பிள்ளைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதிக்கு கொப்பி புத்தகங்கள் வாங்கிய அந்த பெருமதிக்கு இப்போது 11,800 கொடுக்க வேண்டும் என்றால் 18 வீதத்தினால் அதிகரித்திருக்கின்றது சில பொருட்களை பார்த்தீர்கள் என்றால் மூன்று விதத்தினால் அதிகரித்திருக்கின்றது சில பொருட்களுக்கு 15 வீதம் வரி இருந்தது என்று சொன்னால் அவற்றிற்கு மூன்று வீதத்தினால் அதிகரித்திருக்கின்றது.

ஆனால் இதில் நாங்கள் எதிர்பார்க்காத சில விடயங்களுக்கு வட் அதிகரிக்கப்படுகின்றது இவ்வளவு காலமும் பால்மா பெட்டி செய்வதாக இருந்தால் பாலை கொள்வனவு செய்து அதனை பால்மாவாக மாற்றி அதனை பொது செய்யும் போது அதற்கு பால்மா வாங்குவதற்கு வட் கட்டி இருக்க மாட்டார்கள் பால்மாவை கொள்வனவு செய்து அதற்கு வெட்டினை செலுத்தி இதற்கு வரியை விட்டால் நீங்கள் கூறியதை விட அதிகமாக வரும்.

வட்டுக்கு மேல் வட் வரக்கூடிய சூழலும் உள்ளது எவ்வளவு காலமும் வெட் போடாதவைகளுக்கு சேர்த்து தாங்கள் லாபத்தை கணக்கீடு செய்யும் போது நீங்கள் கூறியது போன்று கூடுதலாக வரும் ஆனால் இதில் வடக்கு கிழக்கை பொறுத்தளவில் எங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் கூற முடியாது அரசாங்கம் செய்வதை நாங்கள் என்ன செய்வது என்று உதாரணத்திற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுபவர்கள் இன்று கூற முடியாது தாங்கள் இதற்கு பொறுப்பில்லை என்று.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஒரு பிள்ளைக்கு அப்பியாச கொப்பிகள் அல்லது புத்தகங்கள் வாங்குவதற்கு பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் இவ்வளவு காலமும் 18 வீதம் வரி இல்லாத புத்தகங்களை வாங்குவதற்கு போடப்பட்டிருக்கின்றது என்று சொன்னால் அதற்கு சிவனேசத்துறை சந்திரகாந்தன் அவர்கள் தான் பொறுப்பு இவ்வளவு காலமும் பால்மா வாங்கும் போது பால்மாவிற்கு 18 வீதம் அதிகமாக காசு கொடுக்க வேண்டும் ஆயிரம் ரூபாய் சென்று பால்மா தற்போது 1180 என்று சொன்னால் அதற்கு சதாசிவம் வியாழந்திரனும் பொறுப்பு.

ஏன் இவர்கள் பொறுப்பு என்று சொல்கின்றார்கள் என்றால் பாராளுமன்றம் ஊடாகத்தான் வட்டை 15 வீதம் இருந்து 18மூ இவ்வளவு காலமும் வட் இல்லாதவைகளுக்கு பட் அதிகரிக்கின்றது என்பது சொன்னால் தீர்மானம் எடுக்கப்பட்டது பாராளுமன்றத்தில் அந்த பாராளுமன்றத்தில் இவர்கள் இருவரும் இரு கைகளை தூக்கி வட் அதிகாரியுங்கள் எங்களுக்கு கவலையில்லை என்று மக்களுக்கு எதிரான செயற்பாட்டில் வாக்களித்தவர்கள் நான் அதிலே எதிராக வாக்களித்தவன் என்கின்ற திருப்தி இருக்கின்றது.

இப்போது சுகாதாரத் துறையில் எத்தனையோ மோசடிகள் இடம் பெறுகின்றது புற்றுநோய் இருப்பவர்களுக்கு கூட கொண்டு வந்த மருந்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்குகின்ற அந்த தன்மையுள்ள மருந்து இல்லாமல் பெரும் பச்சை தண்ணி ஊசி கொண்டு வந்திருக்கின்றார்கள்.

இவ்வாறான காரணங்களில் தான் கடந்த காலத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஒரு நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது அந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவன் நான் மட்டக்களப்பில் இருக்கின்ற ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை அவர்களை பொறுத்தவரையில் சுகாதார அமைச்சர் சில நேரம் அவர்களுக்கு ஏதாவது சிறிய சலுகைகளை கொடுக்கின்றோம் என்று கூறுவதற்காக அவர்கள் சுகாதார வளர்ச்சிக்கு எதிர்க்க கூடாது என்று வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.

மட்டக்களப்பில் இருக்கின்ற அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இவர்கள் துரோகம் செய்திருக்கின்றார்கள் அப்போது இந்த வட் அதிகரிப்பு என்பது ஒட்டுமொத்த மக்களை பாதிக்கின்ற விடயம்.

நாங்கள் இவற்றிற்கு மாற்று வழிகள் எத்தனையோ கூறியிருக்கின்றோம் நாங்கள் இந்த சிகரத்தின் வரையினை அதிகரிப்பதன் ஊடாக பேட் அதிகரிக்கின்ற வருமானத்திற்கு சமமான கொடுத்திருக்கலாம் சிகரெட் விற்பனை செய்கின்ற அந்த கம்பெனிக்கு மாத்திரமே வரி அதிகரித்திருக்கும் அதை செய்யவில்லை.

அதாவது பல கோடிக்கணக்கான பணங்களை வங்கிகளில் நிரந்தர சேமிப்பு கணக்குகளில் வைத்திருக்கின்ற ஒரு ஓய்வு பெற்று ஆசிரியர் 10 லட்சம் ரூபாய் வைத்திருந்தால் அதற்கு வரி எடுக்க கூறவில்லை 15 20 கோடி வங்கியில் வைத்திருக்கின்ற அவர்களிடம் வரி எடுக்க கூறினோம் ஆனால் அவை அனைத்தையும் அரசாங்கம் செய்யாமல் இலகுவாக கஷ்டப்பட்ட மக்கள் மீது கொப்பி தொடக்கம் குடிக்கின்ற பால் வரைக்கும் செட் அதிகரித்திருக்கின்றார்கள் அதற்கு எமது மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள் அதில் இலே மட்டக்களப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் எதிராக வாக்களித்தவன் நான் ஒருவர் மட்டும்தான். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


மின்சாரசபை மறுசீரமைப்பு அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே நன்மை அளிக்கிறது - .சாணக்கியன் தெரிவிப்பு.samugammedia மின்சாரசபை மறுசீரமைக்கப்படவேண்டுமானால் அந்த சீரமைப்பானது பொதுமக்களுக்கு நன்மையளிக்கவேண்டும் மாறாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் செய்தியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராகுவதாகவும் அதற்கான காரணம் இலங்கையை மின்சார சபையில் இருக்கும் சில பிரிவுகளை ஆறாகப் பிரித்து தனியார் மையப்படுத்தல் கம்பெனிகளாக பதிவு செய்து தனியா மயமாக்கல் செய்யப்பட போவதாக ஒரு விடயத்தினை முன்வைத்து தாங்கள் தொழிற்சங்கர் நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவ்வாறான சட்டங்கள் பாராளுமன்றத்தில் வந்தால் தாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஈடுபட போவதாக செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது.உண்மையில் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இரண்டும் உண்மையில் மறு சீரமைக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் அதாவது இந்த இரண்டு அமைப்புகளும் தங்களுடைய வருமானத்தை செலவுகளை பார்த்து மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மக்கள் மீது இலங்கையிலே வரி கட்டுகின்ற சாதாரண மக்கள் மீது அந்த சுமையை போடாமல் ஏதாவது ஒரு மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவது உண்மையிலே ஆராயப்பட வேண்டிய விடயம்.ஆனால் இன்று இலங்கை மின்சார சபையில் இருக்கின்ற இந்த ஊழியர்கள் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான பிரதான காரணம் இந்த மின்சார சபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அவற்றிற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் காஞ்சன விஜயசேகர அவர்களுடைய வெளிப்படை தன்மை இல்லாத காஞ்சன விஜயசேகர அவர்களுடைய செயல்பாடுகள் கடந்த காலத்திலே வெளிப்படை தன்மை இல்லாமல் இதில் ஊழல் மோசடிகள் நடக்கலாம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் அந்த ஊழியர்களுக்கு இருப்பதன் காரணத்தினால் தான் இன்று இந்த பாடிய ஆர்ப்பாட்டங்கள் அல்லது பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக மக்களுக்கும் ஒரு அசைவுகளையும் வரக்கூடிய வகையான செயல்பாடுகள் நடக்கக்கூடிய சூழல் அமைந்திருக்கின்றது.இன்று இந்த இலங்கை மின்சார சபையில் ஒவ்வொரு வருடமும் அதில் இருக்கின்ற செலவுகள் அதில் கொடுக்கப்படுகின்ற சம்பளங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் நாங்கள் எழுப்பலாம். இது தொடர்பாக சரியாக ஆராயப்பட வேண்டும் இலங்கையில் இருக்கின்ற நட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு நட்டம் வராத வகையிலே இலங்கை மின்சார சபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றை நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அதனை மறுசீரமைத்து மேல் கட்டமைப்பின் ஊடாக தனியார் பயன்படுத்துதல் என்றாலும் கூட சரியான முறையில் நடக்கின்றதா என்கிற சந்தேகம் நடக்கப்பட வேண்டிய விடயங்கள் சரியாக நடக்கின்றதா என்கிற சந்தேகம் இன்று அனைவரும் மத்தியில் இருக்கின்றது ஏன் எனக்கும் இருக்கின்றது.கடந்த பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்ற போது நாங்கள் இதைப் பற்றி பேசி இருந்தோம் உண்மையில் அவசர மின் சக்தி வாங்கியதில் பல சந்தேகங்கள் காணப்படுகின்றது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நூற்றுக்கு மேலதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபாக் நிறுவனத்திற்கு ஒரு ரூபாய் கூட பணம் வரவிடாமல் இலவசமான முறையில் குத்தகைக்கு கொடுத்துள்ளனர் இதனை விற்றுஇருக்கின்றார்கள் இதில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு வரவேண்டிய வருமானம் வரவில்லை.2003 ஆம் ஆண்டு ஐஓசி நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கும் போது இலங்கை அரசாங்கத்திற்கு அந்த நேரம் 75 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தினை பெற்று விட்டு தான் கொடுத்தார்கள் ஆனால் இன்று சினோபக் நிறுவனத்திற்கு அளவீடு இல்லாமலே கொடுத்திருக்கின்றார்கள்.அவ்வாறான ஒரு நிலை இருக்கின்றபோது இந்த அமைச்சரனுடைய செயல்பாடுகளை பற்றி பாரிய சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றது இந்த சந்தேகங்களின் உடைய வழிபாடு தான் இன்று இலங்கை மின்சார சபையின் உடைய அதிகாரிகள் ஊழியர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு வந்திருக்கின்றது.மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் என்று கூறியது நாள் தான் இன்று மக்களுக்கு இந்த நிறுவனத்துக்குள்ளே இவ்வாறான பிரச்சனைகள் இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது ஆனால் நேற்றைய தினம் மின்சார சபையிலே நிறைவேற்று பணிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையிலே எவ்வாறு காணப்படுகின்றது என்று சொன்னால் மின்சார சபையில் இருக்கின்ற ஊழியர்களோ அல்லது வேலை செய்பவர்களோ இந்த விடயத்தொடர்பாக இது விதமான கருத்துக்களும் ஊடகங்களுக்கு தெரிவிக்க கூடாது எதுவிதமான கருத்துகளும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட கூடாது பதிவு பகிரக்கூடாது என இன்று இந்த மின்சார சபையிலே வேலை செய்கின்ற ஊழியர்களை அடக்குமுறைக்குள்ளே கொண்டு செல்கின்றார்கள் ஒருவருக்கும் தெரியாமல் தாங்கள் செய்யப் போகின்ற ஊழல் மோசடிகளுக்கு இவர்கள் வாய் திறக்க கூடாது என்று இவர்களை அடக்குவதற்கான வேலையை இவர்கள் செய்திருக்கின்றார்கள்.இன்று இந்த நாட்டிலே இடம்பெறுகின்ற பிரச்சனைகள் இன்று நாட்டில் நடக்கும் அநீதிகள் மக்களுக்கு தெரிவதற்கான காரணங்கள் இந்த ஊடகங்கள் ஊடாகத்தான் சமூக வலைத்தளங்களின் ஊடாக இலங்கை மின்சார சபையிலே இருக்கின்ற ஊழியர்கள் உண்மையான நிலவரங்களைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தாவிட்டால் நாங்கள் எங்கு சென்று அறிவது அதேபோன்றுதான் ஐக்கிய தேசியக் கட்சியினுடைய தலைசாலர் வஜ்ர அபேஷேகர அடிக்கடி தெரிவிக்கின்றார் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டும் சமூக வலைத்தளங்கள் ஆபத்து என்று அவரும் இந்த செய்தியை கூறுவதைப் பார்த்தால் நிச்சயமாக இவர்களுக்கு மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழும்ப கூடிய வகையிலான விடயங்களை கட்டுப்படுத்த வேண்டும் அடக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கின்றார்கள்.ஏனென்றால் இன்று மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் வீதியில் இறங்கி செல்ல முடியாத சூழ்நிலை நேற்று பார்த்திருப்பீர்கள் எஸ்.எம் சந்திரசேன ஒரு அமைச்சராக இருந்தவர் அவர் அனுராதபுரத்தில் உள்ள தம்புத்தேகம என்கின்ற பிரதேசத்தில் போக முடியாத ஒரு சூழல் ஏனென்றால் மக்கள் அவரை விரட்டி அடித்த சூழல் ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறான எதிர்ப்புகள் காணப்படுகின்றது.இன்று இந்த எதிர்ப்புகளை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கான பயத்தில்தான் இவர்கள் இந்த ஊடகங்களை அடக்க வேண்டும் சமூக வலைத்தளங்களை அடக்க வேண்டும் என்கின்ற சிந்தனையில் இருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது ஏனென்றால் இன்று ஒரு தேர்தல் நடந்தால் இன்று இவர்களுக்கு பாரிய தோல்வி ஏற்படும்.ஏனென்றால் நாங்கள் வரி அதிகரிப்பை பார்த்தால் இன்று பிள்ளைகள் படிக்கின்ற சாதாரண கொப்பிக்கு கூட இன்று வரி போடப்பட்டுள்ளது 18மூ ஐந்து பிள்ளைகள் இருக்கின்ற வீட்டில் எவ்வாறு அவர்கள் படிப்பது.இன்று பால்மாவிற்கு விலை அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது இவ்வாறு எல்லா விடயங்களிலும் அரசாங்கம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு செல்லும்போது ஒரு தேர்தல் வந்தால் தாங்கள் படுதோல்வி அடைய வேண்டும் ஆனால் எவ்வாறாவது இந்த ஊடகங்களை கட்டுப்படுத்தி இந்த செய்திகள் வெளியில் செல்லாமல் மட்டுப்படுத்துவதனூடாக தாங்கள் ஒரு தேர்தலை வெல்லலாம் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய சூழலை அமைத்துக் கொள்ளலாம் என்கின்ற சிந்தனையில் தான் இன்று இவர்கள் இந்த விடயங்களை தடை செய்கின்றார்கள்.உண்மையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அதை நாங்கள் உண்மையிலேயே எவ்வாறு செய்வது அதனை மறுசீரமைப்பு செய்வதன் ஊடாக தனியாருடன் சேர்ந்து வேலை செய்வதன் ஊடாக இலங்கை மக்களுக்குத் தான் அதனுடைய லாபங்கள் வரவேண்டுமே தவிர அமைச்சருக்கோ அமைச்சர் சார்ந்தோருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அரசாங்கத்தில் முக்கிய இடத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாக ஒரு விடயமாக நாங்கள் இதை வருவதை அனுமதிக்க முடியாது.உண்மையில் கடந்த காலத்தில் வட் சில பொருட்களுக்கு அறவிடப்படவில்லை அதாவது நான் நினைக்கின்றேன் உதாரணமாக பால் மா,  அப்பகயாச கொப்பிகள், புத்தகங்கள் இவ்வாறான விடயங்களுக்கு இதுவரை காலத்திற்கு 18 வீத வரிகள் அறவீடு செய்யவில்லை அதாவது வட் பூச்சிய விதத்தில் இருந்தது இப்போது எடுக்காத பொருட்களுக்கு புதிதாக எடுப்பதற்கு ஆரம்பிக்கின்றார்கள் இதனால் 18 வீதத்தினால் விலைகள் அதிகரிக்கும்.கடந்த காலங்களில் நமது பிள்ளைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதிக்கு கொப்பி புத்தகங்கள் வாங்கிய அந்த பெருமதிக்கு இப்போது 11,800 கொடுக்க வேண்டும் என்றால் 18 வீதத்தினால் அதிகரித்திருக்கின்றது சில பொருட்களை பார்த்தீர்கள் என்றால் மூன்று விதத்தினால் அதிகரித்திருக்கின்றது சில பொருட்களுக்கு 15 வீதம் வரி இருந்தது என்று சொன்னால் அவற்றிற்கு மூன்று வீதத்தினால் அதிகரித்திருக்கின்றது.ஆனால் இதில் நாங்கள் எதிர்பார்க்காத சில விடயங்களுக்கு வட் அதிகரிக்கப்படுகின்றது இவ்வளவு காலமும் பால்மா பெட்டி செய்வதாக இருந்தால் பாலை கொள்வனவு செய்து அதனை பால்மாவாக மாற்றி அதனை பொது செய்யும் போது அதற்கு பால்மா வாங்குவதற்கு வட் கட்டி இருக்க மாட்டார்கள் பால்மாவை கொள்வனவு செய்து அதற்கு வெட்டினை செலுத்தி இதற்கு வரியை விட்டால் நீங்கள் கூறியதை விட அதிகமாக வரும்.வட்டுக்கு மேல் வட் வரக்கூடிய சூழலும் உள்ளது எவ்வளவு காலமும் வெட் போடாதவைகளுக்கு சேர்த்து தாங்கள் லாபத்தை கணக்கீடு செய்யும் போது நீங்கள் கூறியது போன்று கூடுதலாக வரும் ஆனால் இதில் வடக்கு கிழக்கை பொறுத்தளவில் எங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் கூற முடியாது அரசாங்கம் செய்வதை நாங்கள் என்ன செய்வது என்று உதாரணத்திற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுபவர்கள் இன்று கூற முடியாது தாங்கள் இதற்கு பொறுப்பில்லை என்று.இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஒரு பிள்ளைக்கு அப்பியாச கொப்பிகள் அல்லது புத்தகங்கள் வாங்குவதற்கு பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் இவ்வளவு காலமும் 18 வீதம் வரி இல்லாத புத்தகங்களை வாங்குவதற்கு போடப்பட்டிருக்கின்றது என்று சொன்னால் அதற்கு சிவனேசத்துறை சந்திரகாந்தன் அவர்கள் தான் பொறுப்பு இவ்வளவு காலமும் பால்மா வாங்கும் போது பால்மாவிற்கு 18 வீதம் அதிகமாக காசு கொடுக்க வேண்டும் ஆயிரம் ரூபாய் சென்று பால்மா தற்போது 1180 என்று சொன்னால் அதற்கு சதாசிவம் வியாழந்திரனும் பொறுப்பு.ஏன் இவர்கள் பொறுப்பு என்று சொல்கின்றார்கள் என்றால் பாராளுமன்றம் ஊடாகத்தான் வட்டை 15 வீதம் இருந்து 18மூ இவ்வளவு காலமும் வட் இல்லாதவைகளுக்கு பட் அதிகரிக்கின்றது என்பது சொன்னால் தீர்மானம் எடுக்கப்பட்டது பாராளுமன்றத்தில் அந்த பாராளுமன்றத்தில் இவர்கள் இருவரும் இரு கைகளை தூக்கி வட் அதிகாரியுங்கள் எங்களுக்கு கவலையில்லை என்று மக்களுக்கு எதிரான செயற்பாட்டில் வாக்களித்தவர்கள் நான் அதிலே எதிராக வாக்களித்தவன் என்கின்ற திருப்தி இருக்கின்றது.இப்போது சுகாதாரத் துறையில் எத்தனையோ மோசடிகள் இடம் பெறுகின்றது புற்றுநோய் இருப்பவர்களுக்கு கூட கொண்டு வந்த மருந்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்குகின்ற அந்த தன்மையுள்ள மருந்து இல்லாமல் பெரும் பச்சை தண்ணி ஊசி கொண்டு வந்திருக்கின்றார்கள்.இவ்வாறான காரணங்களில் தான் கடந்த காலத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிராக ஒரு நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது அந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவன் நான் மட்டக்களப்பில் இருக்கின்ற ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை அவர்களை பொறுத்தவரையில் சுகாதார அமைச்சர் சில நேரம் அவர்களுக்கு ஏதாவது சிறிய சலுகைகளை கொடுக்கின்றோம் என்று கூறுவதற்காக அவர்கள் சுகாதார வளர்ச்சிக்கு எதிர்க்க கூடாது என்று வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.மட்டக்களப்பில் இருக்கின்ற அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இவர்கள் துரோகம் செய்திருக்கின்றார்கள் அப்போது இந்த வட் அதிகரிப்பு என்பது ஒட்டுமொத்த மக்களை பாதிக்கின்ற விடயம்.நாங்கள் இவற்றிற்கு மாற்று வழிகள் எத்தனையோ கூறியிருக்கின்றோம் நாங்கள் இந்த சிகரத்தின் வரையினை அதிகரிப்பதன் ஊடாக பேட் அதிகரிக்கின்ற வருமானத்திற்கு சமமான கொடுத்திருக்கலாம் சிகரெட் விற்பனை செய்கின்ற அந்த கம்பெனிக்கு மாத்திரமே வரி அதிகரித்திருக்கும் அதை செய்யவில்லை.அதாவது பல கோடிக்கணக்கான பணங்களை வங்கிகளில் நிரந்தர சேமிப்பு கணக்குகளில் வைத்திருக்கின்ற ஒரு ஓய்வு பெற்று ஆசிரியர் 10 லட்சம் ரூபாய் வைத்திருந்தால் அதற்கு வரி எடுக்க கூறவில்லை 15 20 கோடி வங்கியில் வைத்திருக்கின்ற அவர்களிடம் வரி எடுக்க கூறினோம் ஆனால் அவை அனைத்தையும் அரசாங்கம் செய்யாமல் இலகுவாக கஷ்டப்பட்ட மக்கள் மீது கொப்பி தொடக்கம் குடிக்கின்ற பால் வரைக்கும் செட் அதிகரித்திருக்கின்றார்கள் அதற்கு எமது மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றார்கள் அதில் இலே மட்டக்களப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் எதிராக வாக்களித்தவன் நான் ஒருவர் மட்டும்தான். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement