• May 06 2026

“குறிப்பிடத்தக்க சாதனை” விஜய்க்கு சந்திரிகா வாழ்த்து

Chithra / May 6th 2026, 8:39 pm
image

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


2026 மே 6 ஆம் திகதியிட்ட கடிதத்தில், விஜயின் வெற்றியை “குறிப்பிடத்தக்க சாதனை” எனக் குறிப்பிடிய குமாரதுங்க, அவரது தலைமையில் இலங்கை மற்றும் தமிழ்நாடு இடையிலான நட்பு உறவு தொடரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.


“தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான நீண்டநாள் மற்றும் இனிமையான உறவை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் எங்கள் நட்பு உறவு தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.


மேலும், சமீபத்திய தமிழ்நாடு தேர்தல்களைத் தொடர்ந்து பதவியேற்கும் விஜய்க்கு “வலிமை, அறிவு மற்றும் வெற்றி” கிடைக்க வாழ்த்துக்களையும் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


“குறிப்பிடத்தக்க சாதனை” விஜய்க்கு சந்திரிகா வாழ்த்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.2026 மே 6 ஆம் திகதியிட்ட கடிதத்தில், விஜயின் வெற்றியை “குறிப்பிடத்தக்க சாதனை” எனக் குறிப்பிடிய குமாரதுங்க, அவரது தலைமையில் இலங்கை மற்றும் தமிழ்நாடு இடையிலான நட்பு உறவு தொடரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.“தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான நீண்டநாள் மற்றும் இனிமையான உறவை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் எங்கள் நட்பு உறவு தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.மேலும், சமீபத்திய தமிழ்நாடு தேர்தல்களைத் தொடர்ந்து பதவியேற்கும் விஜய்க்கு “வலிமை, அறிவு மற்றும் வெற்றி” கிடைக்க வாழ்த்துக்களையும் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement