• Nov 07 2025

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தில் கொட்டகலை பஸ் தரிப்பு நிலையங்கள் புனரமைப்பு!

shanuja / Oct 9th 2025, 10:08 am
image

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தில் கொட்டகலை பஸ் தரிப்பு நிலையங்கள் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  


கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டம் தொடக்கம் பத்தனை வரையிலான பிரதான வீதிகளை அண்மித்து அமைக்கப்பட்ட பல பஸ் தரிப்பு நிலையங்கள் நீண்ட காலமாக முறியாக சீரமைக்கப்படாமல் இருந்தன. 


அன்றாடம் தொழிலுக்குச் செல்வோர், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பயணிகள் அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர். 


இதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமான புஷ்பா விஸ்வநாதன் தலைமையில் சனிக்கிழமை (4) ஆரம்பமானது. 


கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகின.


நிகழ்வில் பத்தனை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி, பிரதேச சபை, கிராம சேவகர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தில் கொட்டகலை பஸ் தரிப்பு நிலையங்கள் புனரமைப்பு கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தில் கொட்டகலை பஸ் தரிப்பு நிலையங்கள் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டம் தொடக்கம் பத்தனை வரையிலான பிரதான வீதிகளை அண்மித்து அமைக்கப்பட்ட பல பஸ் தரிப்பு நிலையங்கள் நீண்ட காலமாக முறியாக சீரமைக்கப்படாமல் இருந்தன. அன்றாடம் தொழிலுக்குச் செல்வோர், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பயணிகள் அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர். இதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமான புஷ்பா விஸ்வநாதன் தலைமையில் சனிக்கிழமை (4) ஆரம்பமானது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில் அமைந்துள்ள பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகின.நிகழ்வில் பத்தனை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி, பிரதேச சபை, கிராம சேவகர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Advertisement

Advertisement

Advertisement