கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காதி நீதிபதி பதவிக்கு வெற்றிடமாகியுள்ள, கிண்ணியா பிரதேச காதி நீதிபதி பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா சூரா சபை அந்த மகஜரை இன்று (9) அனுப்பி வைத்துள்ளது.
அந்த மகஜாரில், சுமார் 30,000 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்ற கிண்ணியா பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நிரந்தர காதி நீதிபதியொருவர் இல்லாமல் பதில் கடமையாற்றும் நீதிபதி ஒருவரே கடமையில் உள்ளார்.
முஸ்லிம்கள் தங்களது விவாக விவாகரத்து தயாரிப்பு பிணக்குகளை காதி நீதிபதிகள் ஊடாக தீர்க்க வேண்டி இருப்பதினால், கால தாமதம் மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு நிரந்தரமான காதி நீதிபதி ஒருவர் இல்லாத காரணத்தினால் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
மேற்படி விடயத்தை கவனத்தில் கொண்டு அவசரமாக காதி நீதிபதிக்கான நியமனத்தை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை இதற்கான உரிய தீர்வு எட்டப்படவில்லை.
எனவே, இதுகுறித்து மிக விரைவாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மேலும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேசத்திற்கு நிரந்தர காதி நீதிபதியை நியமிக்குமாறு கோரிக்கை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காதி நீதிபதி பதவிக்கு வெற்றிடமாகியுள்ள, கிண்ணியா பிரதேச காதி நீதிபதி பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கிண்ணியா சூரா சபை அந்த மகஜரை இன்று (9) அனுப்பி வைத்துள்ளது.அந்த மகஜாரில், சுமார் 30,000 முஸ்லிம் குடும்பங்கள் வாழுகின்ற கிண்ணியா பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நிரந்தர காதி நீதிபதியொருவர் இல்லாமல் பதில் கடமையாற்றும் நீதிபதி ஒருவரே கடமையில் உள்ளார். முஸ்லிம்கள் தங்களது விவாக விவாகரத்து தயாரிப்பு பிணக்குகளை காதி நீதிபதிகள் ஊடாக தீர்க்க வேண்டி இருப்பதினால், கால தாமதம் மற்றும் பல்வேறு சிரமங்களுக்கு நிரந்தரமான காதி நீதிபதி ஒருவர் இல்லாத காரணத்தினால் எதிர்நோக்கி வருகின்றார்கள்.மேற்படி விடயத்தை கவனத்தில் கொண்டு அவசரமாக காதி நீதிபதிக்கான நியமனத்தை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை இதற்கான உரிய தீர்வு எட்டப்படவில்லை.எனவே, இதுகுறித்து மிக விரைவாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மேலும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.