• Apr 17 2026

உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை

Chithra / Mar 23rd 2026, 1:22 pm
image

நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 


இதுதொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,


பண்டிகை காலத்திற்கு முன்பாக, மேலும் பல அத்தியாவசியப் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. 


பண்டிகை காலத்தில் உணவு பற்றாக்குறையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொருட்களின் விலை உயர்வுகள் குறித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளன.


எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதை நோக்கமாக கலந்துரையாடல் கொண்டுள்ளன.

உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,பண்டிகை காலத்திற்கு முன்பாக, மேலும் பல அத்தியாவசியப் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. பண்டிகை காலத்தில் உணவு பற்றாக்குறையின்றி வழங்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொருட்களின் விலை உயர்வுகள் குறித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளன.எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதை நோக்கமாக கலந்துரையாடல் கொண்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement