• Dec 09 2024

கிண்ணியாவில் பாலத்துக்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

Sharmi / Aug 20th 2024, 9:29 pm
image

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில்  ஆணொருவரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஐந்து  பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முகமட் லெப்பை முபாரக் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலங்கேணி பாலத்துக்கு அருகில் ஆற்றில் மிதந்து  கிடந்த சடலத்தை கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி மௌலவி எம். எஸ்.ஷாபி நேரில் சென்று  பார்வையிட்டதுடன் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

குறித்த மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கிண்ணியாவில் பாலத்துக்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில்  ஆணொருவரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் ஐந்து  பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முகமட் லெப்பை முபாரக் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.ஆலங்கேணி பாலத்துக்கு அருகில் ஆற்றில் மிதந்து  கிடந்த சடலத்தை கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி மௌலவி எம். எஸ்.ஷாபி நேரில் சென்று  பார்வையிட்டதுடன் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.குறித்த மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement