நெடுந்தீவில் இருந்து சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த லொறி ஒன்றினை நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிசார் கைப்பற்றியதோடு குறித்த லொறியில் இருந்து 10 மாடுகளை மீட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
நெடுந்தீவில் இருந்து 20 மாடுகள் முறையான அளவு பரிமாணங்களின்றி சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் நோக்கி லொறியில் கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் லொறி கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்து 10 மாடுகள் மீட்கப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் யாழ் பண்ணை பகுதியில் 10 மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவில் குறிகாட்டுவான் வரை படகிலும் பின்னர் லொறிமூலம் மாடுகளை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோதமாக கடத்தப்பட்ட மாடுகள் மீட்பு நெடுந்தீவில் இருந்து சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த லொறி ஒன்றினை நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிசார் கைப்பற்றியதோடு குறித்த லொறியில் இருந்து 10 மாடுகளை மீட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது நெடுந்தீவில் இருந்து 20 மாடுகள் முறையான அளவு பரிமாணங்களின்றி சட்டவிரோதமான முறையில் யாழ்ப்பாணம் நோக்கி லொறியில் கொண்டு வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் லொறி கைப்பற்றப்பட்டது.இதனையடுத்து வாகனத்தில் இருந்து 10 மாடுகள் மீட்கப்பட்டது.சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் யாழ் பண்ணை பகுதியில் 10 மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவில் குறிகாட்டுவான் வரை படகிலும் பின்னர் லொறிமூலம் மாடுகளை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.