• Nov 19 2024

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞனின் சடலம் மீட்பு..!

Sharmi / Aug 14th 2024, 3:31 pm
image

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம்(14) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம்(12) திடீரென காணாமல் போயுள்ளார். 

இதனையடுத்து குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்கள் முன்னெடுக்கப்பட்டப்போதும் அது பயனளிக்கவில்லை. 

இந்நிலையில், இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் நேற்றைய தினம்(13) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் இன்று(14) சடலமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துக்கொண்டு இருந்ததை பிரதேசவாசிகள் கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தலவாக்கலை மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 24வயது கொண்ட டி.மதுஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞனின் சடலம் மீட்பு. மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம்(14) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம்(12) திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்து குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்கள் முன்னெடுக்கப்பட்டப்போதும் அது பயனளிக்கவில்லை. இந்நிலையில், இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் நேற்றைய தினம்(13) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் இன்று(14) சடலமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துக்கொண்டு இருந்ததை பிரதேசவாசிகள் கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.அதனையடுத்து, பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தலவாக்கலை மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 24வயது கொண்ட டி.மதுஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement