• Mar 16 2026

கண்டியில் இரண்டு பாடசாலைகளில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் ஆய்வு

Chithra / Dec 23rd 2025, 9:45 am
image

 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி நகரிலுள்ள இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.


கண்டியில் உள்ள பிரபல பாடசாலைகளான தர்மராஜா கல்லூரி மற்றும் மகாமாயா கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள்   சென்று ஆய்வு மேற்கொண்டனர். 


அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக இந்த இரண்டு பாடசாலைக் கட்டடங்களும் சேதமடைந்தன.


தர்மராஜ கல்லூரியின் வணிகப் பிரிவு கட்டடம், மற்றும் 8-9ம்  வகுப்புகள் நடைபெறும் கட்டடம், விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் தடாகம் ஆகியவற்றை  பயன்படுத்துவதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. 


தர்மராஜா கல்லூரிக்கு சொந்தமாக 58 ஏக்கர் காணி உள்ளது. இதன் பல்வேறு இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


மகாமாயா பெண்கள் கல்லூரி கட்டடங்கள்  குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு இன்னும்  கிடைக்கவில்லை என்று கண்டி, கங்காவட்டா கோரலே பிரதேச செயலாளர் அமில நவரத்ன தெரிவித்தார்.


தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை  மகாமாயா பெண்கள் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு கண்டி கல்வி வலய கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கண்டியில் இரண்டு பாடசாலைகளில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் ஆய்வு  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி நகரிலுள்ள இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.கண்டியில் உள்ள பிரபல பாடசாலைகளான தர்மராஜா கல்லூரி மற்றும் மகாமாயா கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள்   சென்று ஆய்வு மேற்கொண்டனர். அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக இந்த இரண்டு பாடசாலைக் கட்டடங்களும் சேதமடைந்தன.தர்மராஜ கல்லூரியின் வணிகப் பிரிவு கட்டடம், மற்றும் 8-9ம்  வகுப்புகள் நடைபெறும் கட்டடம், விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் தடாகம் ஆகியவற்றை  பயன்படுத்துவதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. தர்மராஜா கல்லூரிக்கு சொந்தமாக 58 ஏக்கர் காணி உள்ளது. இதன் பல்வேறு இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மகாமாயா பெண்கள் கல்லூரி கட்டடங்கள்  குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு இன்னும்  கிடைக்கவில்லை என்று கண்டி, கங்காவட்டா கோரலே பிரதேச செயலாளர் அமில நவரத்ன தெரிவித்தார்.தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை  மகாமாயா பெண்கள் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு கண்டி கல்வி வலய கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement