• Dec 13 2024

அரச நிறுவனங்களின் சம்பள அதிகரிப்பிற்கு கட்டுப்பாடு..! வரப்போகும் புதிய சட்டமூலம்!

Chithra / Mar 5th 2024, 12:58 pm
image

 

அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்றைய தினம் அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அரச நிறுவனங்களின் சம்பள அதிகரிப்பிற்கு கட்டுப்பாடு. வரப்போகும் புதிய சட்டமூலம்  அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அனைத்து அரச நிறுவனங்களும் தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்றைய தினம் அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement