• Nov 24 2024

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் - எச்சரிக்கும் கத்தோலிக்க திருச்சபை

Chithra / Oct 18th 2024, 12:09 pm
image

 உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய தலைவர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். சிஐடியினர்  விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஷானி அபயசேகர மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் எங்களிற்கு எந்த பிரச்சினையுமில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவு குறித்து பெருமளவு அறிக்கைகள் வெளியாகியுள்ளன, சிஐடியினர் இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கட்டும், அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் - எச்சரிக்கும் கத்தோலிக்க திருச்சபை  உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவுடன் அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுக்களை அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிவித்துரு ஹெல உறுமய தலைவர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். சிஐடியினர்  விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஷானி அபயசேகர மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் எங்களிற்கு எந்த பிரச்சினையுமில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவு குறித்து பெருமளவு அறிக்கைகள் வெளியாகியுள்ளன, சிஐடியினர் இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கட்டும், அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement