• Dec 27 2024

திருத்தப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு திட்டம் - ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்

Chithra / Dec 25th 2024, 10:55 am
image

 

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நன்புரி சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமாவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500/- ரூபாவை 10,000/- ரூபா வரை அதிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 15,000/- ரூபா 17,500/- ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நலன்புரிப் பலன்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கான சமூகப் பிரிவுகளில், 480,000 குடும்பங்களுக்கு மாதாந்த நல உதவித்தொகை 5,000 மற்றும் 17,000 ரூபா வழங்கப்படும்.

960,000 வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா நலன்பரி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன.

இது இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இழப்பீடு காலத்தை 31.03.2025 வரை நீட்டித்துள்ளது.

அதற்கமைய, 2024 மே மாதம் 17ஆம் திகதி வௌியிடப்பட்ட அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே பலன்களை பெற்று, பல்வேறு காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பயனாளிகளுக்கும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து தற்போது பரிசீலனைக்கு உள்ளான விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் தகைமையின் அடிப்படையில் இம்மாதம் 31ஆம் திகதி வரையில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


திருத்தப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு திட்டம் - ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல்  திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நன்புரி சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமாவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500/- ரூபாவை 10,000/- ரூபா வரை அதிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மிகவும் வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 15,000/- ரூபா 17,500/- ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.நலன்புரிப் பலன்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கான சமூகப் பிரிவுகளில், 480,000 குடும்பங்களுக்கு மாதாந்த நல உதவித்தொகை 5,000 மற்றும் 17,000 ரூபா வழங்கப்படும்.960,000 வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா நலன்பரி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன.இது இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இழப்பீடு காலத்தை 31.03.2025 வரை நீட்டித்துள்ளது.அதற்கமைய, 2024 மே மாதம் 17ஆம் திகதி வௌியிடப்பட்ட அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், ஏற்கனவே பலன்களை பெற்று, பல்வேறு காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பயனாளிகளுக்கும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து தற்போது பரிசீலனைக்கு உள்ளான விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் தகைமையின் அடிப்படையில் இம்மாதம் 31ஆம் திகதி வரையில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement