• Nov 10 2024

பணக்கார வேட்பாளர் திலித், ஏழை வேட்பாளர் ரணில்! வெளியானது விபரம்

Chithra / Aug 23rd 2024, 4:03 pm
image


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, 

மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4,54,285 ரூபாய் என்றும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2,85,681 ரூபாய் மாதாந்த வருமானத்துடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 256,802 ரூபாய் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 317,786 ரூபாய் என்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகேயின் மாத வருமானம் 3 இலட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பணக்கார வேட்பாளர் திலித், ஏழை வேட்பாளர் ரணில் வெளியானது விபரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது இடத்தில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4,54,285 ரூபாய் என்றும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2,85,681 ரூபாய் மாதாந்த வருமானத்துடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 256,802 ரூபாய் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 317,786 ரூபாய் என்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகேயின் மாத வருமானம் 3 இலட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Advertisement

Advertisement

Advertisement