நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிரித்தலே மற்றும் கந்தளம ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிக மழையினால் ஆறு வருடங்களுக்கு பின்னர் கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழையின் காரணமாக கந்தளம நீர்த்தேக்கமும் நேற்று முதல் நிரம்பி வருகிறது.
இதன் காரணமாக தம்புள்ளை – வேவல குளம் பிரதான வீதியினூடாக சிறியரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
உயர்வடைந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிரித்தலே மற்றும் கந்தளம ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக மழையினால் ஆறு வருடங்களுக்கு பின்னர் கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையின் காரணமாக கந்தளம நீர்த்தேக்கமும் நேற்று முதல் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக தம்புள்ளை – வேவல குளம் பிரதான வீதியினூடாக சிறியரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.