கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் இன்று (1) சனிக்கிழமை அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும். கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது வினாடிக்கு 1000 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாக கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அலுத்ஓயா குளத்தின் நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளதால், அதனுடைய ஆறு வான் கதவுகள் அரை அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நூற்றுக் கணக்கான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிகரித்து வரும் குளங்களின் நீர்மட்டம்; திறக்கப்பட்ட வான்கதவுகள் கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் இன்று (1) சனிக்கிழமை அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளன.கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும். கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்துள்ளது.தற்போது வினாடிக்கு 1000 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாக கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.இதேவேளை, அலுத்ஓயா குளத்தின் நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளதால், அதனுடைய ஆறு வான் கதவுகள் அரை அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நூற்றுக் கணக்கான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.