• May 20 2024

கிறிப்டோ நாணய பயன்பாட்டில் ஆபத்து! மத்திய வங்கியின் அறிவிப்பு

Chithra / May 10th 2024, 9:11 am
image

Advertisement

 

இலங்கையில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க  அறிவித்துள்ளார்.

நாட்டில் கிறிப்டோ நாணயம் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 


 

கிறிப்டோ நாணய பயன்பாட்டில் ஆபத்து மத்திய வங்கியின் அறிவிப்பு  இலங்கையில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க  அறிவித்துள்ளார்.நாட்டில் கிறிப்டோ நாணயம் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement