• Dec 02 2024

கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் - உடனடி வேலைத்திட்டம் ஆரம்பம்

Chithra / Dec 2nd 2024, 8:13 am
image

 

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல வீதிகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த வீதிகள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை உடனடியாக புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார குறிப்பிட்டார்.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த மனம்பிட்டிய – அரலகங்வில வீதிப் பாலத்தை 2 நாட்களுக்குள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புனரமைத்துள்ளனர்.

வழமையாக இவ்வாறான நிர்மாணப்பணிகளுக்கு 15 நாட்கள் தேவைப்படுகின்ற போதிலும், குறித்த அதிகாரிகள் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் பலனாக இரண்டு நாட்களில் இதனை கட்டி முடிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் - உடனடி வேலைத்திட்டம் ஆரம்பம்  கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல வீதிகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அதிகார சபை தெரிவித்துள்ளது.இதனால், குறித்த வீதிகள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை உடனடியாக புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார குறிப்பிட்டார்.அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த மனம்பிட்டிய – அரலகங்வில வீதிப் பாலத்தை 2 நாட்களுக்குள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புனரமைத்துள்ளனர்.வழமையாக இவ்வாறான நிர்மாணப்பணிகளுக்கு 15 நாட்கள் தேவைப்படுகின்ற போதிலும், குறித்த அதிகாரிகள் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் பலனாக இரண்டு நாட்களில் இதனை கட்டி முடிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement