கண்டி - தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாரன்இன்ன பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நாரன்இன்ன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால், மிகப் பெரிய கற்கள் உருண்டு வந்து அங்கிருந்த வீடொன்றின் ஒன்றின் மேல் விழுந்துள்ளது.
மிகப்பெரிய மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து வந்ததால், நாரன்இன்ன பகுதியில் உள்ள வீட்டு வரிசை முழுவதும் மண்குவியலின் கீழ் புதைந்து போயுள்ளது. மக்களின் உடமைகள் மற்றும் அனைத்து பொருட்களும் மண் கீழ் புதைந்துள்ளன.
அத்துடன் நாரன்இன்ன பகுதியில் உள்ள சில வீடுகளும் ஒரு மொன்டிசோரி பள்ளியும் இந்த மண்சரிவால் முழுவதும் புதைந்து போயுள்ளன.
தற்போது 15 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
நிலச்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிப்பது முற்றிலும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு நாரஇன்ன பிரதேசத்திற்கு பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவால் வீடுகளுக்கு மேல் விழுந்த கற்பாறைகள் ; புதையுண்டு கிடக்கும் வீடுகள் கண்டி - தெல்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாரன்இன்ன பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.நாரன்இன்ன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால், மிகப் பெரிய கற்கள் உருண்டு வந்து அங்கிருந்த வீடொன்றின் ஒன்றின் மேல் விழுந்துள்ளது.மிகப்பெரிய மண்மேடு மற்றும் கற்கள் சரிந்து வந்ததால், நாரன்இன்ன பகுதியில் உள்ள வீட்டு வரிசை முழுவதும் மண்குவியலின் கீழ் புதைந்து போயுள்ளது. மக்களின் உடமைகள் மற்றும் அனைத்து பொருட்களும் மண் கீழ் புதைந்துள்ளன. அத்துடன் நாரன்இன்ன பகுதியில் உள்ள சில வீடுகளும் ஒரு மொன்டிசோரி பள்ளியும் இந்த மண்சரிவால் முழுவதும் புதைந்து போயுள்ளன. தற்போது 15 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நிலச்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிப்பது முற்றிலும் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு நாரஇன்ன பிரதேசத்திற்கு பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.