• Nov 23 2024

பெண்களுக்கான கரைபடியாத அரசியலை முன்னெடுக்கவுள்ளேன்- ரோஹினா மஹரூப் கருத்து..!

Sharmi / Oct 22nd 2024, 8:11 pm
image

நாட்டில் காணப்படும் பெரும் பிரதான கட்சிகளில் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோரில் பெண் வேட்பாளர்கள் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில் எமது சர்வஜன அதிகார கட்சி ஊடாக பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ரோஹினா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியா பூவரசந்தீவு பகுதியில் இன்று (22) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பல கட்சிகள் சிதறி காணப்படுவதுடன் பெண்களுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

இதனை சரிசெய்ய திருமலை மக்கள் என்னை எதிர்பார்க்கிறார்கள்.

ஆணாதிக்கத்தை தூரமாக்கி புதிய கட்சியில் களமிறக்கி பூர்த்தி செய்யவுள்ளேன்.

பெண்களுக்காக பல திட்டங்களை செய்ய முன்வைக்க உள்ளோம்.

தீராத பெண் விதவைகள் தொடர்பிலும் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவின் துணிச்சலான எதிர்க் கட்சி என்ற தொனிப்பொருளில் தேர்தலை எதிர் நோக்கவுள்ளோம்.

பெண் பிரதிநிதித்துவம் காணப்பட வேண்டும் பெண் பலத்தால் பாராளுமன்றம் அனுப்புவார்கள் எனவும் நம்புகிறேன்.

சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் இருந்து மக்கள் ஒதுக்க முதல் அவர்களாகவே ஒதுங்கி விட்டார்கள்.

ஊழலற்ற வராக எனது தந்தை அரசியலில் இருந்தார். இதற்காக கரை படியாத எனது தந்தை எம்.ஈ.எச் மஹ்ரூப் அவர்களின் பாசறையில் வளர்ந்த என்னை மக்கள் நன்கு அறிவார்கள்.

மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்து எனது அரசிதலை முன்னெடுக்கவுள்ளேன் கமிசன் ,ஊழல் வாதிகள் தாங்களாகவே விலகியுள்ளார்கள் . அரசியலில் எனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை தந்தால் அது நிச்சயமாக ஏழை எளியவர்களுக்காகவே இருக்கும் எனது பணிகளை அவர்களுக்காகவே முன்னெடுப்பேன் என்றார்.



பெண்களுக்கான கரைபடியாத அரசியலை முன்னெடுக்கவுள்ளேன்- ரோஹினா மஹரூப் கருத்து. நாட்டில் காணப்படும் பெரும் பிரதான கட்சிகளில் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோரில் பெண் வேட்பாளர்கள் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில் எமது சர்வஜன அதிகார கட்சி ஊடாக பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ரோஹினா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியா பூவரசந்தீவு பகுதியில் இன்று (22) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.பல கட்சிகள் சிதறி காணப்படுவதுடன் பெண்களுக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. இதனை சரிசெய்ய திருமலை மக்கள் என்னை எதிர்பார்க்கிறார்கள். ஆணாதிக்கத்தை தூரமாக்கி புதிய கட்சியில் களமிறக்கி பூர்த்தி செய்யவுள்ளேன். பெண்களுக்காக பல திட்டங்களை செய்ய முன்வைக்க உள்ளோம். தீராத பெண் விதவைகள் தொடர்பிலும் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவின் துணிச்சலான எதிர்க் கட்சி என்ற தொனிப்பொருளில் தேர்தலை எதிர் நோக்கவுள்ளோம். பெண் பிரதிநிதித்துவம் காணப்பட வேண்டும் பெண் பலத்தால் பாராளுமன்றம் அனுப்புவார்கள் எனவும் நம்புகிறேன்.சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் இருந்து மக்கள் ஒதுக்க முதல் அவர்களாகவே ஒதுங்கி விட்டார்கள். ஊழலற்ற வராக எனது தந்தை அரசியலில் இருந்தார். இதற்காக கரை படியாத எனது தந்தை எம்.ஈ.எச் மஹ்ரூப் அவர்களின் பாசறையில் வளர்ந்த என்னை மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்து எனது அரசிதலை முன்னெடுக்கவுள்ளேன் கமிசன் ,ஊழல் வாதிகள் தாங்களாகவே விலகியுள்ளார்கள் . அரசியலில் எனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை தந்தால் அது நிச்சயமாக ஏழை எளியவர்களுக்காகவே இருக்கும் எனது பணிகளை அவர்களுக்காகவே முன்னெடுப்பேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement