• Apr 07 2025

ரொஷானின் மனைவியிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

Chithra / Apr 6th 2025, 8:13 am
image

 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் மனைவி தினுஷா ரணசிங்கவிடம் வலான ஊழல் ஒழிப்பு பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. 

போலியாகப் பதிவு செய்யப்பட்ட பாரவூர்தி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 

இதற்கமைய, தினுஷா ரணசிங்கவிடம் நேற்று சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

போலியாக பதிவு செய்யப்பட்ட பாரவூர்தியை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரொஷானின் மனைவியிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பதிவு  முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் மனைவி தினுஷா ரணசிங்கவிடம் வலான ஊழல் ஒழிப்பு பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. போலியாகப் பதிவு செய்யப்பட்ட பாரவூர்தி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதற்கமைய, தினுஷா ரணசிங்கவிடம் நேற்று சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. போலியாக பதிவு செய்யப்பட்ட பாரவூர்தியை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement