• Feb 19 2025

கண்டி தேசிய மருத்துவமனையின் அபிவிருத்திக்காக 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Chithra / Feb 14th 2025, 9:13 am
image


கண்டி தேசிய மருத்துவமனையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக, 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டி தேசிய மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள பல அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை அண்மையில் ஆய்வு செய்தபோதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கண்டி தேசிய மருத்துவமனையில் நோயாளிகளுக்காக கட்டப்படவுள்ள New Cancer Complex, Bone Marrow Transplant Unit, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் வார்டு வளாகம் ஆகிய நான்கு முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், அவை விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும், எனவே, நடந்து வரும் கட்டுமானப் பணிகளை ஓரளவுக்கு முடிக்க தேவையான நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவமனைகளின் இருப்பிடம் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகளின் வசதிகளை அதிகரிக்கவும் ஒரு முறையான திட்டத்தைத் தயாரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.    

கண்டி தேசிய மருத்துவமனையின் அபிவிருத்திக்காக 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கண்டி தேசிய மருத்துவமனையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக, 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.கண்டி தேசிய மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள பல அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை அண்மையில் ஆய்வு செய்தபோதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.அதன்படி, கண்டி தேசிய மருத்துவமனையில் நோயாளிகளுக்காக கட்டப்படவுள்ள New Cancer Complex, Bone Marrow Transplant Unit, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் வார்டு வளாகம் ஆகிய நான்கு முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால், அவை விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும், எனவே, நடந்து வரும் கட்டுமானப் பணிகளை ஓரளவுக்கு முடிக்க தேவையான நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்க வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவமனைகளின் இருப்பிடம் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.அத்துடன் தேசிய மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகளின் வசதிகளை அதிகரிக்கவும் ஒரு முறையான திட்டத்தைத் தயாரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.    

Advertisement

Advertisement

Advertisement