• Nov 22 2024

தொடரும் ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Chithra / Nov 22nd 2024, 9:21 am
image


ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தரை அப்பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கும் வரை தனது தொழில் நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த குறிப்பிட்டார்.

இதேவேளை, ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை கல்வி அமைச்சுக்கு முன்பாக அடையாளப் பேரணியொன்றில் ஈடுபட்டதுடன் பின்னர் அமைச்சின் செயலாளரை சந்தித்து பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினர்.

தொடரும் ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு, பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.பல்கலைக்கழக துணைவேந்தரை அப்பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கும் வரை தனது தொழில் நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த குறிப்பிட்டார்.இதேவேளை, ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை கல்வி அமைச்சுக்கு முன்பாக அடையாளப் பேரணியொன்றில் ஈடுபட்டதுடன் பின்னர் அமைச்சின் செயலாளரை சந்தித்து பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினர்.

Advertisement

Advertisement

Advertisement