• Nov 20 2024

இரண்டாவது நாளாகவும் தொடரும் ருஹுனு பல்கலைக்கழக போராட்டம்

Chithra / Nov 20th 2024, 9:47 am
image

 

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பல்கலைக்கழக கல்வி, கல்விசாரா மற்றும் மாணவர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (20) இரண்டாவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், 

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ஒன்றிய கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்ற பிறகு கல்வித்துறை ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி தனிப்பட்ட பழிவாங்கலுக்கு உள்ளாக்கியுள்ளார். 

அவர்களை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி சாரா ஊழியர்களுக்கும் அதே நிலைமைதான். ஏனைய துணைவேந்தர்களுக்கும் இதே நிலைமைதான், அவருக்கு அரசியல் பாதுகாப்பு உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.


இரண்டாவது நாளாகவும் தொடரும் ருஹுனு பல்கலைக்கழக போராட்டம்  ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பல்கலைக்கழக கல்வி, கல்விசாரா மற்றும் மாணவர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (20) இரண்டாவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ஒன்றிய கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்தபல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்ற பிறகு கல்வித்துறை ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி தனிப்பட்ட பழிவாங்கலுக்கு உள்ளாக்கியுள்ளார். அவர்களை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி சாரா ஊழியர்களுக்கும் அதே நிலைமைதான். ஏனைய துணைவேந்தர்களுக்கும் இதே நிலைமைதான், அவருக்கு அரசியல் பாதுகாப்பு உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement