உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்ய ராணுவம் தனது அதிநவீன மற்றும் ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய 'ஜிர்கான்' (3M22 Zircon) ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை ஏவி அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இத்தாக்குதலின் போது 2 முதல் 3 ஜிர்கான் ஏவுகணைகள் உக்ரைனின் வான் பாதுகாப்பு வளையங்களை மீறி கீவ் நகரின் முக்கியப் பகுதிகளைத் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் இந்த அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள உக்ரைன் ராணுவம் அமெரிக்கத் தயாரிப்பான 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணை தடுப்பு அமைப்பைப் பயன்படுத்தியது.
இருப்பினும், அதிவேகமாக வந்த ஜிர்கான் ஏவுகணையை இடைமறித்து அழிக்க ஏவப்பட்ட உக்ரைனின் பேட்ரியாட் ஏவுகணைகளில் ஒன்று, இலக்கைத் தவறவிட்டதோடு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவானில் செயலிழந்து கீவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து கீவ் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கீவ் நகருக்குள் புகுந்து தாக்கிய ரஷ்யாவின் அதிவேக ஏவுகணைகள் உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்ய ராணுவம் தனது அதிநவீன மற்றும் ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய 'ஜிர்கான்' (3M22 Zircon) ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை ஏவி அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலின் போது 2 முதல் 3 ஜிர்கான் ஏவுகணைகள் உக்ரைனின் வான் பாதுகாப்பு வளையங்களை மீறி கீவ் நகரின் முக்கியப் பகுதிகளைத் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ரஷ்யாவின் இந்த அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள உக்ரைன் ராணுவம் அமெரிக்கத் தயாரிப்பான 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணை தடுப்பு அமைப்பைப் பயன்படுத்தியது.இருப்பினும், அதிவேகமாக வந்த ஜிர்கான் ஏவுகணையை இடைமறித்து அழிக்க ஏவப்பட்ட உக்ரைனின் பேட்ரியாட் ஏவுகணைகளில் ஒன்று, இலக்கைத் தவறவிட்டதோடு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவானில் செயலிழந்து கீவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாக்குதலைத் தொடர்ந்து கீவ் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.