• Nov 23 2024

வைத்தியர் பெல்லனவை பதவியிலிருந்து நீக்குங்கள்..! சிற்றூழியர்கள் போராட்டம்..!

Chithra / Feb 17th 2024, 3:20 pm
image


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி அந்த மருத்துவமனையின் சுகாதார பணியாளர்கள் குழுவும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், 72 சுகாதார சங்கங்கள் மருத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. 

அதன் போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்ற ரீதியில் வைத்தியர் ருக்ஷான் பெல்லான பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், 

வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர் பெல்லனவை பதவியிலிருந்து நீக்குங்கள். சிற்றூழியர்கள் போராட்டம். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி அந்த மருத்துவமனையின் சுகாதார பணியாளர்கள் குழுவும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்மையில், 72 சுகாதார சங்கங்கள் மருத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவைக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன் போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்ற ரீதியில் வைத்தியர் ருக்ஷான் பெல்லான பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.இதேவேளை, இன்று காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement