• May 07 2024

நான்கு வழியாக சிவனொளிபாதமலைக்கு கொண்டு செல்லபட்ட புனிதப்பொருட்கள்...!samugammedia

Anaath / Dec 27th 2023, 4:52 pm
image

Advertisement

4 வழியாக சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் சிவனொளி பாதமலைக்கு  கொண்டு செல்ல்லப்பட்டுள்ளன. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,

பெல்மடுல்ல கல்பொட்டுல்ல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த புனித கலசம், சமன் தேவர் சிலை மற்றும் தேவபிரான் சிலை ஆகியவை  இன்று  அதிகாலை 4.00 மணிக்கு நல்லதண்ணி நகருக்கு எடுத்து வரப்பட்டது.

மேலும்  ஒரு ஊர்வலம் கல்  பொத்தாவில ரஜ மஹா விகாரையில் இருந்து அவிஸ்சாவலை தெஹியோவிற்ற எட்டியாதொட்ட கரவனல்ல கித்துல்ஹல கினிகத்தேன வட்டவளை ஹட்டன் நோர்வூட் மஸ்கெலியா நல்லதன்னிய ஊடாகவும் மற்றுமொரு ஊர்வலம் பலாங்கொடை, மாராத்தன்ன பொகவந்தலா டின்சின் நோர்வூட் மஸ்கெலியா நல்லதண்ணி ஊடாகவும் நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மண்டபத்தை சென்றடைந்தது.



இது தவிர மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி, பாலபத்தல மற்றும் குருவிட்ட மற்றும் எரட்ன ஊடாக சிவனொளி   பாத மலைக்கு சென்றடைந்துள்ளது.

இன்று அதிகாலை காலை சுப வேளையில் சிவனடி பாத மலை உச்சியில் உள்ள ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பட்ட பின்னர் ஸ்ரீ பாதஸ்தானாதிபதி பூஜ்ய பெங்கமுவே தம்மதின்ன தேரரின் தலைமையில் புனித கலசம், சமன் தேவர் சிலை மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.


நல்லதண்ணி நகருக்கு மிக பாதுகாப்பான முறையில் வாகன ஊர்திகள் மூலம் கொண்டு வர பட்ட ஏனைய சுவாமி சிலை மற்றும் உபகரணங்கள் அனைத்தும் லக்சபான இராணுவ முகாம் சிப்பாய்கள் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் பல்லக்கில் வைத்து மலை உச்சிக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு பிரதிஷ்டை செய்து பௌத்த மதத்தைச் சேர்ந்த பிக்குகளினால் பிரித் ஓத பட்டு இன்று காலை முதல் சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமானது.

நேற்று காலை முதல் இன்று காலை வரையில் நல்லதண்ணி வழியாகவும் இரத்தினபுரி பலாபத்பல வழியாகவும் சுமார் இருபது ஆயிரம் பேர் வந்து வழிபாடு செய்து உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


நான்கு வழியாக சிவனொளிபாதமலைக்கு கொண்டு செல்லபட்ட புனிதப்பொருட்கள்.samugammedia 4 வழியாக சமன் தெய்வம் மற்றும் ஆபரணங்கள் சிவனொளி பாதமலைக்கு  கொண்டு செல்ல்லப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,பெல்மடுல்ல கல்பொட்டுல்ல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த புனித கலசம், சமன் தேவர் சிலை மற்றும் தேவபிரான் சிலை ஆகியவை  இன்று  அதிகாலை 4.00 மணிக்கு நல்லதண்ணி நகருக்கு எடுத்து வரப்பட்டது.மேலும்  ஒரு ஊர்வலம் கல்  பொத்தாவில ரஜ மஹா விகாரையில் இருந்து அவிஸ்சாவலை தெஹியோவிற்ற எட்டியாதொட்ட கரவனல்ல கித்துல்ஹல கினிகத்தேன வட்டவளை ஹட்டன் நோர்வூட் மஸ்கெலியா நல்லதன்னிய ஊடாகவும் மற்றுமொரு ஊர்வலம் பலாங்கொடை, மாராத்தன்ன பொகவந்தலா டின்சின் நோர்வூட் மஸ்கெலியா நல்லதண்ணி ஊடாகவும் நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மண்டபத்தை சென்றடைந்தது.இது தவிர மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி, பாலபத்தல மற்றும் குருவிட்ட மற்றும் எரட்ன ஊடாக சிவனொளி   பாத மலைக்கு சென்றடைந்துள்ளது.இன்று அதிகாலை காலை சுப வேளையில் சிவனடி பாத மலை உச்சியில் உள்ள ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பட்ட பின்னர் ஸ்ரீ பாதஸ்தானாதிபதி பூஜ்ய பெங்கமுவே தம்மதின்ன தேரரின் தலைமையில் புனித கலசம், சமன் தேவர் சிலை மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.நல்லதண்ணி நகருக்கு மிக பாதுகாப்பான முறையில் வாகன ஊர்திகள் மூலம் கொண்டு வர பட்ட ஏனைய சுவாமி சிலை மற்றும் உபகரணங்கள் அனைத்தும் லக்சபான இராணுவ முகாம் சிப்பாய்கள் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் பல்லக்கில் வைத்து மலை உச்சிக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு பிரதிஷ்டை செய்து பௌத்த மதத்தைச் சேர்ந்த பிக்குகளினால் பிரித் ஓத பட்டு இன்று காலை முதல் சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமானது.நேற்று காலை முதல் இன்று காலை வரையில் நல்லதண்ணி வழியாகவும் இரத்தினபுரி பலாபத்பல வழியாகவும் சுமார் இருபது ஆயிரம் பேர் வந்து வழிபாடு செய்து உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement