யாழ் வடமராட்சி கடற்கரையில் சிறிய கடற்கலமொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வேம்படி கடற்கரையில் இன்று மாலை கடற்கலமொன்று கரையொதுங்கியுள்ளதுடன் அதன் இரண்டு கரையிலும் பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மூங்கில் இலைபோன்ற ஒரு கிளையும் காணப்படுகிறது.
இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் கரையொதுங்கிய கடற்கலத்தை தமது முகாமுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த கடற்கலமானது இந்துக்கள் இமக்கிரிகையின்போது தேர் செய்து கடலில் விடுவதுபோல் பௌத்த மக்களும் இவ்வாறு கடற்கலத்தை அமைத்து கடலில் விட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை குறித்த கடற்கலம் யாருடையது என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி கடற்கரையில் மர்மமான முறையில் கரையொதுங்கிய கடற்கலத்தால் பரபரப்பு.samugammedia யாழ் வடமராட்சி கடற்கரையில் சிறிய கடற்கலமொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வேம்படி கடற்கரையில் இன்று மாலை கடற்கலமொன்று கரையொதுங்கியுள்ளதுடன் அதன் இரண்டு கரையிலும் பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மூங்கில் இலைபோன்ற ஒரு கிளையும் காணப்படுகிறது.இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் கரையொதுங்கிய கடற்கலத்தை தமது முகாமுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.அதேவேளை, குறித்த கடற்கலமானது இந்துக்கள் இமக்கிரிகையின்போது தேர் செய்து கடலில் விடுவதுபோல் பௌத்த மக்களும் இவ்வாறு கடற்கலத்தை அமைத்து கடலில் விட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதேவேளை குறித்த கடற்கலம் யாருடையது என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.