• Nov 28 2024

மூதூர் பிரதேச செயலகத்தின் சாகித்திய விழா...!samugammedia

Sharmi / Dec 28th 2023, 8:45 am
image

2023 ஆம் ஆண்டுக்கான மூதூர் பிரதேச சாகித்திய விழா தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நேற்றையதினம் (27) மாலை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கலைத்துறைக்கு சேவையாற்றிய சிரேஷ்ட, இளம் கலைஞர்கள் என 45 கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைகலாச்சாரங்களை பிரதிபலிக்கு வகையிலான கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அத்தோடு "முத்து" என்ற சஞ்சிகையும், இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த "சேகுதீதி" என்பவரின் பெயரில் வரலாற்று குறும்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் கே.எம்.மர்சூக் கலந்து சிறப்பித்தார். 

விசேட அதிதிகளாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் , மூதூர் பிரதேச சபையின் செயலாளர் வி.சத்தியசோதி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  





மூதூர் பிரதேச செயலகத்தின் சாகித்திய விழா.samugammedia 2023 ஆம் ஆண்டுக்கான மூதூர் பிரதேச சாகித்திய விழா தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நேற்றையதினம் (27) மாலை இடம்பெற்றது.மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது கலைத்துறைக்கு சேவையாற்றிய சிரேஷ்ட, இளம் கலைஞர்கள் என 45 கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது கலைகலாச்சாரங்களை பிரதிபலிக்கு வகையிலான கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.அத்தோடு "முத்து" என்ற சஞ்சிகையும், இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த "சேகுதீதி" என்பவரின் பெயரில் வரலாற்று குறும்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்தார்.கௌரவ அதிதியாக நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் கே.எம்.மர்சூக் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதிகளாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் , மூதூர் பிரதேச சபையின் செயலாளர் வி.சத்தியசோதி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

Advertisement

Advertisement

Advertisement