• Feb 11 2025

தோல்விக்கான காரணத்தை பொதுவெளியில் வெளியிட மறுக்கும் சஜித் அணி!

Chithra / Nov 18th 2024, 2:11 pm
image

 


ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்விக்கான சில காரணங்களை வெளியிட முடியாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்

எங்கள் தோல்விக்கான சில காரணங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் மட்டுமே விவாதிப்போம் என்று தெரிவித்தார்.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஏன் பொதுமக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என்று கேட்டதற்கு, சரியான நேரத்தில் பிரேமதாச பொது வெளியில் வருவார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 35 ஆசனங்களை பெற்று படுதோல்வியடைந்த ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் எதிரணியில் அமரவுள்ளது.   

நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


தோல்விக்கான காரணத்தை பொதுவெளியில் வெளியிட மறுக்கும் சஜித் அணி  ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்விக்கான சில காரணங்களை வெளியிட முடியாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்எங்கள் தோல்விக்கான சில காரணங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் மட்டுமே விவாதிப்போம் என்று தெரிவித்தார்.கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஏன் பொதுமக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என்று கேட்டதற்கு, சரியான நேரத்தில் பிரேமதாச பொது வெளியில் வருவார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 35 ஆசனங்களை பெற்று படுதோல்வியடைந்த ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் எதிரணியில் அமரவுள்ளது.   நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement