• May 08 2025

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம்- சஜித் குற்றச்சாட்டு..!

Sharmi / Nov 29th 2024, 10:39 am
image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய புதிய திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, குடிமக்களுக்கு உறுதியான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது.

தேர்தல் பிரசார வாக்குறுதிகளுக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன. மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை குறைப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புக்குள் பணிபுரிவதை எனது கட்சி ஆதரிக்கும் அதே வேளையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம்.

அரசின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையின்மை காணப்படுகிறது. 

அதேவேளை, அரசாங்கம் மக்களின் ஆணையைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த பாதையில் செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுகிறது என்றார். 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம்- சஜித் குற்றச்சாட்டு. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பொது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய புதிய திட்டம் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, குடிமக்களுக்கு உறுதியான நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டது.தேர்தல் பிரசார வாக்குறுதிகளுக்கும் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன. மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை குறைப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புக்குள் பணிபுரிவதை எனது கட்சி ஆதரிக்கும் அதே வேளையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி கட்டமைப்புகளை சீர்திருத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம்.அரசின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையின்மை காணப்படுகிறது. அதேவேளை, அரசாங்கம் மக்களின் ஆணையைப் புறக்கணித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகுத்த பாதையில் செல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுகிறது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now