எதிர்வரும் சில வாரங்களில் சுகாதார அமைச்சின் பல உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படக் கூடும் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, மருந்து விநியோக பிரிவு, மருந்து ஒழுங்குமுறை ஆணையம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், அரச மருந்து சட்டமூலக் கூட்டுத்தாபனம் ஆகிய பல உயர் பதவிகள் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள், தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக உரிய பதவிகளை மாற்றுமாறு பல தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதேவேளை, இந்தப் பதவிகளுக்கு மேலதிகமாக, சுகாதார அமைச்சர் பதவியிலும் மாற்றம் ஏற்படலாம் எனவும், அவ்வாறு மாற்றம் ஏற்பட்டால், கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுகாதார அமைச்சராக சஜித் தரப்பு எம்.பி நியமனம் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் எதிர்வரும் சில வாரங்களில் சுகாதார அமைச்சின் பல உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படக் கூடும் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதன்படி, மருந்து விநியோக பிரிவு, மருந்து ஒழுங்குமுறை ஆணையம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், அரச மருந்து சட்டமூலக் கூட்டுத்தாபனம் ஆகிய பல உயர் பதவிகள் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.கடந்த காலங்களில் சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள், தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக உரிய பதவிகளை மாற்றுமாறு பல தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதேவேளை, இந்தப் பதவிகளுக்கு மேலதிகமாக, சுகாதார அமைச்சர் பதவியிலும் மாற்றம் ஏற்படலாம் எனவும், அவ்வாறு மாற்றம் ஏற்பட்டால், கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.