• Oct 26 2026

கொழும்பில் அமெரிக்க போர்க்கப்பல்! மறுபுறம் 40 ஈரானிய மாலுமிகள் மீட்பு – பின்னணியில் என்ன நடக்கிறது?

Chithra / Oct 26th 2026, 4:29 pm
image


அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 'யு.எஸ்.எஸ் கென்பெரா' (USS Canberra - LCS 30) போர்க்கப்பல் இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


வழக்கமான துறைமுக விஜயத்தின் ஒரு பகுதியாக, 'இன்டிபென்டன்ஸ்' வகையைச் சேர்ந்த குறித்த போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பு ஆண்டில் இந்த அமெரிக்க போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தருவது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த ஜூன் மாதத்திலும் இக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.


இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பலுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் தொழில்முறை ஒத்துழைப்புக்காக இலங்கை கடற்படையினருக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் எரிக் மேயர் (Eric Meyer), அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் விஜயங்கள் சுமூகமாகவும் திறம்படவும் நடைபெறுவதற்கு இலங்கை கடற்படையினர் வழங்கிவரும் ஆதரவைப் பெரிதும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கான இரு நாடுகளினதும் கூட்டுப் பொறுப்பை இத்தகைய விஜயங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, இலங்கை கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் சிக்கித் தவித்த ஈரானிய கப்பல்களிலிருந்து 40 ஈரானிய மாலுமிகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மீட்கப்பட்ட மாலுமிகள் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அவர்களைப் பாதுகாப்பாக ஈரானுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இலங்கை வெளியுறவு அமைச்சு ஒருங்கிணைத்து நிறைவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் ஈரானிய கப்பல்களின் நடமாட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவரும் சூழலில், அமெரிக்க போர்க்கப்பலின் கொழும்பு விஜயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ஒருபுறம் அமெரிக்காவுடனான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை இலங்கை முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் கடலில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு மாலுமிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.


இவ்வாறான சூழலில், இந்தியப் பெருங்கடலின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் வருகை தந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

கொழும்பில் அமெரிக்க போர்க்கப்பல் மறுபுறம் 40 ஈரானிய மாலுமிகள் மீட்பு – பின்னணியில் என்ன நடக்கிறது அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 'யு.எஸ்.எஸ் கென்பெரா' (USS Canberra - LCS 30) போர்க்கப்பல் இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வழக்கமான துறைமுக விஜயத்தின் ஒரு பகுதியாக, 'இன்டிபென்டன்ஸ்' வகையைச் சேர்ந்த குறித்த போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் இந்த அமெரிக்க போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தருவது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த ஜூன் மாதத்திலும் இக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பலுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் தொழில்முறை ஒத்துழைப்புக்காக இலங்கை கடற்படையினருக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் எரிக் மேயர் (Eric Meyer), அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் விஜயங்கள் சுமூகமாகவும் திறம்படவும் நடைபெறுவதற்கு இலங்கை கடற்படையினர் வழங்கிவரும் ஆதரவைப் பெரிதும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கான இரு நாடுகளினதும் கூட்டுப் பொறுப்பை இத்தகைய விஜயங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, இலங்கை கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் சிக்கித் தவித்த ஈரானிய கப்பல்களிலிருந்து 40 ஈரானிய மாலுமிகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மீட்கப்பட்ட மாலுமிகள் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர்களைப் பாதுகாப்பாக ஈரானுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இலங்கை வெளியுறவு அமைச்சு ஒருங்கிணைத்து நிறைவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் ஈரானிய கப்பல்களின் நடமாட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவரும் சூழலில், அமெரிக்க போர்க்கப்பலின் கொழும்பு விஜயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஒருபுறம் அமெரிக்காவுடனான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை இலங்கை முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் கடலில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு மாலுமிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.இவ்வாறான சூழலில், இந்தியப் பெருங்கடலின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பு துறைமுகத்திற்கு அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் வருகை தந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement