• Oct 27 2026

நாட்டில் மீண்டும் மின்வெட்டு அபாயமா? நுரைச்சோலையில் நிறுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி!

Chithra / Oct 26th 2026, 10:27 am
image


நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த மின் பிறப்பாக்கியில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், மின் பிறப்பாக்கி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


எனினும், இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.


அதேவேளை, இரண்டாவது மின் பிறப்பாக்கியின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து, மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


நாட்டில் மீண்டும் மின்வெட்டு அபாயமா நுரைச்சோலையில் நிறுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மின் பிறப்பாக்கியில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், மின் பிறப்பாக்கி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.எனினும், இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.அதேவேளை, இரண்டாவது மின் பிறப்பாக்கியின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து, மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement