நாட்டில் தற்போது நிலவிவரும் கனமழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, பாடசாலைகளை நடத்துவதா அல்லது தற்காலிகமாக மூடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணக் கல்விச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நிலவும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் அறிவுறுத்தல்களும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில கல்வி வலயங்களுக்குட்பட்ட 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் நிலவிவரும் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட மாகாணக் கல்வி அதிகாரிகள் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
26 பாடசாலைகள் மூடப்பட்டன ஏனைய பாடசாலைகளுக்கும் விடுமுறையா கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு நாட்டில் தற்போது நிலவிவரும் கனமழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, பாடசாலைகளை நடத்துவதா அல்லது தற்காலிகமாக மூடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணக் கல்விச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நிலவும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் அறிவுறுத்தல்களும் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதற்கமைய, மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில கல்வி வலயங்களுக்குட்பட்ட 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் நிலவிவரும் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட மாகாணக் கல்வி அதிகாரிகள் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.