• Oct 26 2026

இலங்கையின் பிரமாண்ட காட்டு யானைக்கு இறுதி மரியாதை! நெகிழ்ச்சியான தருணம்!

Chithra / Oct 26th 2026, 12:36 pm
image


இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த 'கவந்தீச' யானைக்கு அஞ்சலி செலுத்தும் விசேட நிகழ்வு அம்பாறையில் நடைபெற்றுள்ளது.


அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நேற்று (25) மத அனுஷ்டானங்களுடன் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.


அம்பாறை சாஸனாரக்ஷக பலமண்டலத்தின் செயலாளரும், நாமல் ஓயா கல்லூரியின் பிரதி அதிபரும், கல் ஓயா நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நாமல் தாலவ ஸ்ரீ சைலபாம்பராம விகாரையின் ஸ்தாபகருமான வணக்கத்திற்குரிய சாஸ்திரவேதி கம்பஹ நாரத தேரர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.


ஊடகவியலாளர் சுசந்த அமரபந்து ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் செல்வி யமுனா கொனாரா நிதி அனுசரணை வழங்கியிருந்தார்.


இதன்போது, உயிரிழந்த கவந்தீச யானையின் நினைவாக விசேட மதக் கிரியைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.


இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாக அறியப்பட்ட கவந்தீசவின் உயிரிழப்பு, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் நினைவாக இந்த விசேட அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அம்பாறை மாவட்டம், பொத்துவில் - ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, யானை உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த யானை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட நேரடி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பிரமாண்ட காட்டு யானைக்கு இறுதி மரியாதை நெகிழ்ச்சியான தருணம் இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு, அண்மையில் உயிரிழந்த 'கவந்தீச' யானைக்கு அஞ்சலி செலுத்தும் விசேட நிகழ்வு அம்பாறையில் நடைபெற்றுள்ளது.அம்பாறை, நாமல் தாலவ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைலபாம்பராம விகாரையில் நேற்று (25) மத அனுஷ்டானங்களுடன் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.அம்பாறை சாஸனாரக்ஷக பலமண்டலத்தின் செயலாளரும், நாமல் ஓயா கல்லூரியின் பிரதி அதிபரும், கல் ஓயா நதி பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நாமல் தாலவ ஸ்ரீ சைலபாம்பராம விகாரையின் ஸ்தாபகருமான வணக்கத்திற்குரிய சாஸ்திரவேதி கம்பஹ நாரத தேரர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.ஊடகவியலாளர் சுசந்த அமரபந்து ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் செல்வி யமுனா கொனாரா நிதி அனுசரணை வழங்கியிருந்தார்.இதன்போது, உயிரிழந்த கவந்தீச யானையின் நினைவாக விசேட மதக் கிரியைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டன.இலங்கையின் மிகப்பெரிய காட்டு யானைகளில் ஒன்றாக அறியப்பட்ட கவந்தீசவின் உயிரிழப்பு, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் நினைவாக இந்த விசேட அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அம்பாறை மாவட்டம், பொத்துவில் - ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, யானை உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த யானை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட நேரடி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement