இலங்கையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தெதுரு ஓயா, ராஜாங்கனை, குக்குளே கங்கை மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், குறித்த நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் எட்டு வான் கதவுகள் இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் தெதுரு ஓயாவுக்கு வினாடிக்கு 10,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து எதிர்வரும் மணித்தியாலங்களில் வான் கதவுகள் மேலும் திறக்கப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டு கலா ஓயாவுக்கு வினாடிக்கு 3,800 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நீர் வெளியேற்றம் முற்பகல் 9 மணியளவில் வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையைக் கருத்திற்கொண்டு அதன் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வினாடிக்கு 45 கன மீற்றர் நீரும், மின் உற்பத்தியின்போது வினாடிக்கு 48 கன மீற்றர் நீரும் வெளியேற்றப்படுகின்றன.
அதற்கமைய, குடா ஓயாவுக்கு வினாடிக்கு மொத்தமாக 93 கன மீற்றர் நீர் வெளியேற்றப்படுவதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கலாவாவியின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதால் அதன் இரண்டு அவசர வான் கதவுகள் ஆறு அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கலா ஓயாவுக்கு வினாடிக்கு 511 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், தம்புள்ள ஓயா ஊடாக கலாவாவிக்கு வினாடிக்கு சுமார் 5,500 கன அடி நீர் வந்துசேருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் சில நீரேந்துப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், குறித்த ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
அத்துடன், நில்வளா கங்கை, கின் கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயா உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டத்திலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
எனினும், நாட்டில் இதுவரை பாரிய வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரெனப் பெய்யும் பலத்த மழை காரணமாகத் தாழ்நிலப் பகுதிகளில் தற்காலிக வெள்ளநிலை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு, தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள் நீர்மட்ட மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் தவளம பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய, புலத்சிங்கள, பேருவளை மற்றும் மதுராவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் நிரம்பும் நீர்த்தேக்கங்கள். மறுபுறம் மண்சரிவு அபாயம். இலங்கைக்கு தொடரும் ஆபத்து இலங்கையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, தெதுரு ஓயா, ராஜாங்கனை, குக்குளே கங்கை மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், குறித்த நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் எட்டு வான் கதவுகள் இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் தெதுரு ஓயாவுக்கு வினாடிக்கு 10,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து எதிர்வரும் மணித்தியாலங்களில் வான் கதவுகள் மேலும் திறக்கப்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டு கலா ஓயாவுக்கு வினாடிக்கு 3,800 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்த நீர் வெளியேற்றம் முற்பகல் 9 மணியளவில் வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையைக் கருத்திற்கொண்டு அதன் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வினாடிக்கு 45 கன மீற்றர் நீரும், மின் உற்பத்தியின்போது வினாடிக்கு 48 கன மீற்றர் நீரும் வெளியேற்றப்படுகின்றன.அதற்கமைய, குடா ஓயாவுக்கு வினாடிக்கு மொத்தமாக 93 கன மீற்றர் நீர் வெளியேற்றப்படுவதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.இதனிடையே, கலாவாவியின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதால் அதன் இரண்டு அவசர வான் கதவுகள் ஆறு அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் கலா ஓயாவுக்கு வினாடிக்கு 511 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும், தம்புள்ள ஓயா ஊடாக கலாவாவிக்கு வினாடிக்கு சுமார் 5,500 கன அடி நீர் வந்துசேருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் சில நீரேந்துப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், குறித்த ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.அத்துடன், நில்வளா கங்கை, கின் கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மா ஓயா உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டத்திலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.எனினும், நாட்டில் இதுவரை பாரிய வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.இதேவேளை, எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரெனப் பெய்யும் பலத்த மழை காரணமாகத் தாழ்நிலப் பகுதிகளில் தற்காலிக வெள்ளநிலை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு, தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள் நீர்மட்ட மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.இதன்படி, காலி மாவட்டத்தின் தவளம பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய, புலத்சிங்கள, பேருவளை மற்றும் மதுராவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.