• Oct 27 2026

நட்சத்திர ஹோட்டலில் தங்கியது ஏன்? சரத் வீரசேகரவுடனும் சந்திப்பு - சர்ச்சைகளுக்கு மௌனம் கலைத்த கஸ்ஸப தேரர்!

Chithra / Oct 26th 2026, 10:37 am
image


கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியமை மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமளித்துள்ளார்.


கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது தமக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவு காரணமாகவே ஹோட்டலில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தமக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து உரிய இடமொன்றில் தங்கி சிகிச்சை பெறுமாறு பக்தர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஏற்கனவே பல பக்தர்கள் தங்குமிட வசதிகளை வழங்க முன்வந்திருந்த போதிலும், ஆரம்பத்தில் அவற்றை நிராகரித்ததாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து கொழும்பிலுள்ள கிங்ஸ்பரி (Kingsbury) ஹோட்டலில் தங்குவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


அங்கு மருத்துவக் குழுவொன்று வருகை தந்து தமக்கு சிகிச்சையளித்ததாகவும், ஹோட்டல் தங்குமிடச் செலவு மற்றும் மருத்துவச் செலவுகளை வெவ்வேறு பக்தர்கள் பொறுப்பேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஹோட்டலுக்கு வருகை தந்து தம்மைச் சந்தித்தமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் கஸ்ஸப தேரர் பதிலளித்துள்ளார்.


"நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சரத் வீரசேகர என்னைப் பார்க்க வந்தார். அது தடை செய்யப்பட்ட செயலா? என்னைப் பார்ப்பதற்கு யாராவது அனுமதி பெற வேண்டுமா?" என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


மேலும், பௌத்த துறவிகளுக்கு உணவு, உடை, கட்டடங்கள், காணிகள் மற்றும் ஏனைய வசதிகளை பக்தர்கள் தானமாக வழங்குவது நீண்டகால பௌத்த மரபாக இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கிடையில், தாம் தங்கியிருந்த ஹோட்டலின் கண்காணிப்பு கமரா காட்சிகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் கஸ்ஸப தேரர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


இவ்வாறான தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவது தனியுரிமைக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதுடன், தமது பாதுகாப்பு தொடர்பிலும் கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று (25) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர ஹோட்டலில் தங்கியது ஏன் சரத் வீரசேகரவுடனும் சந்திப்பு - சர்ச்சைகளுக்கு மௌனம் கலைத்த கஸ்ஸப தேரர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியமை மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமளித்துள்ளார்.கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது தமக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவு காரணமாகவே ஹோட்டலில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது தமக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து உரிய இடமொன்றில் தங்கி சிகிச்சை பெறுமாறு பக்தர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே பல பக்தர்கள் தங்குமிட வசதிகளை வழங்க முன்வந்திருந்த போதிலும், ஆரம்பத்தில் அவற்றை நிராகரித்ததாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து கொழும்பிலுள்ள கிங்ஸ்பரி (Kingsbury) ஹோட்டலில் தங்குவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.அங்கு மருத்துவக் குழுவொன்று வருகை தந்து தமக்கு சிகிச்சையளித்ததாகவும், ஹோட்டல் தங்குமிடச் செலவு மற்றும் மருத்துவச் செலவுகளை வெவ்வேறு பக்தர்கள் பொறுப்பேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஹோட்டலுக்கு வருகை தந்து தம்மைச் சந்தித்தமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் கஸ்ஸப தேரர் பதிலளித்துள்ளார்."நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சரத் வீரசேகர என்னைப் பார்க்க வந்தார். அது தடை செய்யப்பட்ட செயலா என்னைப் பார்ப்பதற்கு யாராவது அனுமதி பெற வேண்டுமா" என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.மேலும், பௌத்த துறவிகளுக்கு உணவு, உடை, கட்டடங்கள், காணிகள் மற்றும் ஏனைய வசதிகளை பக்தர்கள் தானமாக வழங்குவது நீண்டகால பௌத்த மரபாக இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கிடையில், தாம் தங்கியிருந்த ஹோட்டலின் கண்காணிப்பு கமரா காட்சிகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் கஸ்ஸப தேரர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.இவ்வாறான தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுவது தனியுரிமைக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதுடன், தமது பாதுகாப்பு தொடர்பிலும் கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று (25) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement