• Oct 27 2026

தீவிரப் புயலாக மாறும் ‘அர்னாப்’ - இலங்கையில் இன்று இரவு என்ன நடக்கப்போகிறது?

Chithra / Oct 26th 2026, 1:32 pm
image


வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ (ARNAB) புயல் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த புயல் மேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையிலும் நகர்ந்து, இன்று (26) இரவு சுமார் 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான வானிலைத் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


புயலின் தாக்கம் காரணமாகக் கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முற்பகல்  வெளியிடப்பட்ட கடல் வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை, அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, வட அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 95 வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


அதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0 மில்லிமீற்றரும், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், நாட்டில் கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஏனைய 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.


இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, வடமத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தீவிரப் புயலாக மாறும் ‘அர்னாப்’ - இலங்கையில் இன்று இரவு என்ன நடக்கப்போகிறது வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ (ARNAB) புயல் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த புயல் மேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையிலும் நகர்ந்து, இன்று (26) இரவு சுமார் 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக இலங்கைக்கு மறைமுகமான வானிலைத் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, வடக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.புயலின் தாக்கம் காரணமாகக் கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முற்பகல்  வெளியிடப்பட்ட கடல் வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை, அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, வட அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 95 வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.அதற்கு அடுத்தபடியாக குளியாப்பிட்டிய பகுதியில் 193.0 மில்லிமீற்றரும், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நாட்டில் கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஏனைய 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.இன்று முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, வடமத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கடுமையான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement