சுவ செரிய இலவச அம்புலன்ஸ் சேவையை விமர்சித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறேன். இந்த சேவையில் உள்ளவர்கள் 24 மணித்தியாலங்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள்.
ஆகவே அவர்களுக்கான கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் அடிப்படையில் சுவ செரிய இலவச அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போது பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்தார்கள், எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அவர்களுக்கு நான் மன்னிப்பு வழங்குகிறேன். இந்த சேவை தோல்வி என்று எவராலும் குறிப்பிட முடியாது.
சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 5300 தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.
முதல் அழைப்பிலேயே பொது மக்களுக்கு சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுவ செரிய அம்புலன்ஸூக்குள் 684 பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன.
சுவசெரிய அம்புலன்ஸ் சேவையில் உள்ள அம்புலன்ஸ் வண்டிகள் ஒரு நாளைக்கு மாத்திரம் 24,692 கிலோமீற்றர் தூரம் பயணிக்கின்றன. நகர புறங்கள் உட்பட கிராம புறங்களிலும் இந்த சேவை வினைத்திறனான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
1461 சேவையாளர்களுக்கான கேள்வி காணப்படுகின்ற நிலையில் 1210 பேர் மாத்திரமே தற்போது சேவையில் உள்ளார்கள்.
ஆகவே காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
சுவசெரிய அம்புலன்ஸ் சேவையாளர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பு. சுவ செரிய இலவச அம்புலன்ஸ் சேவையை விமர்சித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறேன். இந்த சேவையில் உள்ளவர்கள் 24 மணித்தியாலங்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கான கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் அடிப்படையில் சுவ செரிய இலவச அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போது பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்தார்கள், எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களுக்கு நான் மன்னிப்பு வழங்குகிறேன். இந்த சேவை தோல்வி என்று எவராலும் குறிப்பிட முடியாது.சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 5300 தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. முதல் அழைப்பிலேயே பொது மக்களுக்கு சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுவ செரிய அம்புலன்ஸூக்குள் 684 பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன.சுவசெரிய அம்புலன்ஸ் சேவையில் உள்ள அம்புலன்ஸ் வண்டிகள் ஒரு நாளைக்கு மாத்திரம் 24,692 கிலோமீற்றர் தூரம் பயணிக்கின்றன. நகர புறங்கள் உட்பட கிராம புறங்களிலும் இந்த சேவை வினைத்திறனான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.1461 சேவையாளர்களுக்கான கேள்வி காணப்படுகின்ற நிலையில் 1210 பேர் மாத்திரமே தற்போது சேவையில் உள்ளார்கள்.ஆகவே காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.