• Nov 15 2024

நிச்சயமற்ற நிலையில் சம்பள அதிகரிப்பு, நிவாரணங்கள், வரி குறைப்புகள்! முன்னாள் அமைச்சர் பகீர் தகவல்

Chithra / Nov 7th 2024, 9:02 am
image

 

அடுத்த வருடத்துக்காக வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தாமதமாகும் அளவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் பிற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  

அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே அதிகாரத்துக்கு வந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே முன்வைக்க வேண்டும்.  

ஆனால் அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை இந்த வருடம் சமர்ப்பிப்பதில்லை. அதற்கு பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது.   

இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு மூலம் அரசாங்கத்தின் அன்றாட செலவுகளுக்கு மாத்திரமே பணம் செலவிட முடியும். அபிவிருத்தி திட்டங்களுக்கோ நிவாரணங்களை வழங்கவோ முடியாது. 

மேலும் அரசாங்கத்துக்கு உலக வங்கி 200 டொலர் மில்லியன் வழங்கி இருப்பதாக அரசாங்கம் பெருமையாக தெரிவித்து வருகிறது. ஆனால் அது நன்கொடையாக வழங்கப்படவில்லை. கடனாகவே வழங்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் உதவி தற்போது பிற்படுத்தப்பட்டிருக்கிறது.  

ஏனெனில் வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பது பிற்படுத்தப்படும்போது கடன் தவணையும் பிற்படுத்தப்படுகிறது.  

எமது வருமான வழிகளை பார்த்தே எமக்கு அடுத்த கட்ட கடன் தவணை கிடைக்கிறது. 

அதேபோன்று வரவு செலவு திட்டம் பிற்படுத்தப்படுவதன் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிவாரணங்கள் வரி குறைப்புகள் என அனைத்தும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

நிச்சயமற்ற நிலையில் சம்பள அதிகரிப்பு, நிவாரணங்கள், வரி குறைப்புகள் முன்னாள் அமைச்சர் பகீர் தகவல்  அடுத்த வருடத்துக்காக வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தாமதமாகும் அளவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் பிற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.  அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே அதிகாரத்துக்கு வந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே முன்வைக்க வேண்டும்.  ஆனால் அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை இந்த வருடம் சமர்ப்பிப்பதில்லை. அதற்கு பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது.   இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு மூலம் அரசாங்கத்தின் அன்றாட செலவுகளுக்கு மாத்திரமே பணம் செலவிட முடியும். அபிவிருத்தி திட்டங்களுக்கோ நிவாரணங்களை வழங்கவோ முடியாது. மேலும் அரசாங்கத்துக்கு உலக வங்கி 200 டொலர் மில்லியன் வழங்கி இருப்பதாக அரசாங்கம் பெருமையாக தெரிவித்து வருகிறது. ஆனால் அது நன்கொடையாக வழங்கப்படவில்லை. கடனாகவே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் உதவி தற்போது பிற்படுத்தப்பட்டிருக்கிறது.  ஏனெனில் வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பது பிற்படுத்தப்படும்போது கடன் தவணையும் பிற்படுத்தப்படுகிறது.  எமது வருமான வழிகளை பார்த்தே எமக்கு அடுத்த கட்ட கடன் தவணை கிடைக்கிறது. அதேபோன்று வரவு செலவு திட்டம் பிற்படுத்தப்படுவதன் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிவாரணங்கள் வரி குறைப்புகள் என அனைத்தும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement