• May 01 2024

பொன்சேகாவின் இடைக்கால தடைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு..!

Chithra / Mar 4th 2024, 12:36 pm
image

Advertisement


ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை இடைநிறுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாக இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

அதன்படி, இந்த ஆட்சேபனைகள் மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரத் ​​பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, 

அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொன்சேகாவின் இடைக்கால தடைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை இடைநிறுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாக இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.சரத் ​​பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த ஆட்சேபனைகளை முன்வைத்தார்.அதன்படி, இந்த ஆட்சேபனைகள் மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.சரத் ​​பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பொருளாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement