ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சஜித்தின் இந்த நடவடிக்கை கட்சியை நாளாந்தம் பலவீனப்படுத்துவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
எதிர்கட்சி தலைவருக்கு அப்பால் வேறு இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கட்சி உள்ளது.
குறித்த இருவரும் யார் என்பது தொடர்பில் நேரம் வரும் போது தகவல் வெளியிடுவேன்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது குடும்ப வர்த்தகமாக மாறியுள்ளது.
கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகின்றது. ஜனநாயகம் என்ற எதுவும் கட்சிக்குள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டில் -சம்பிக்க பகிரங்க குற்றச்சாட்டு - கட்சிக்குள் கடும் குழப்பம். ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சஜித்தின் இந்த நடவடிக்கை கட்சியை நாளாந்தம் பலவீனப்படுத்துவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.எதிர்கட்சி தலைவருக்கு அப்பால் வேறு இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கட்சி உள்ளது.குறித்த இருவரும் யார் என்பது தொடர்பில் நேரம் வரும் போது தகவல் வெளியிடுவேன்.ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது குடும்ப வர்த்தகமாக மாறியுள்ளது.கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகின்றது. ஜனநாயகம் என்ற எதுவும் கட்சிக்குள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.