எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்காக தமது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய தேசிய கட்சி தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்காக தமது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குழு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய தேசிய கட்சி தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.