• Mar 31 2025

Sharmi / Jul 5th 2024, 12:37 pm
image

மறைந்த  இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.

தமிழ் அரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு  சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.

இதனையடுத்து சம்மந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று (07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


திருமலையை வந்தடைந்த சம்பந்தனின் பூதவுடல். மறைந்த  இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.தமிழ் அரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு  சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.இதனையடுத்து சம்மந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில், இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று (07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement