• Jul 08 2024

தொழிலாளர்களின் சம்பள விவகாரம்; மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம்..! – ஜீவன் அறிவிப்பு

Chithra / Jul 5th 2024, 12:52 pm
image

Advertisement

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் குறித்த தொழில் அமைச்சின் வர்த்தமானிக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம் என நீர்வழங்கல் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

இடைக்காலத் தடை விதிக்கப்பட்டாலும், இன்னும் ஒரு மாதத்துக்குள் வழக்கு விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

முன்னர் ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், பின்னர் 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும் நாங்களே பெற்றுக் கொடுத்தோம்.

1,700 ரூபாய் சம்பள விடயத்தில் முதல் சுற்றில் நாங்கள் வெற்றிபெற்றோம், இரண்டாம் சுற்றில் கம்பனிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள், மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம்.

ஏனைய தொழிற்சங்கங்கள் இப்போது வெடி வெடித்து கொண்டாடாமல் இருந்தாலே போதும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பள விவகாரம்; மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம். – ஜீவன் அறிவிப்பு  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் குறித்த தொழில் அமைச்சின் வர்த்தமானிக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம் என நீர்வழங்கல் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.இடைக்காலத் தடை விதிக்கப்பட்டாலும், இன்னும் ஒரு மாதத்துக்குள் வழக்கு விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.முன்னர் ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தையும், பின்னர் 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும் நாங்களே பெற்றுக் கொடுத்தோம்.1,700 ரூபாய் சம்பள விடயத்தில் முதல் சுற்றில் நாங்கள் வெற்றிபெற்றோம், இரண்டாம் சுற்றில் கம்பனிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள், மூன்றாம் சுற்றில் நாங்கள் வெல்வோம்.ஏனைய தொழிற்சங்கங்கள் இப்போது வெடி வெடித்து கொண்டாடாமல் இருந்தாலே போதும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement