• Apr 03 2025

சம்பந்தனின் இறுதி நிகழ்வு இன்று - ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு...!

Anaath / Jul 7th 2024, 11:20 am
image

தமிழ்த் தேசிய இனத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி நிகழ்வு தமிழர் திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சம்பந்தனின் புகழுடல் அவரது  திருகோணமலை இல்லத்தில் நேற்றுமுன்தினம் தொடக்கம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு முன்பாக இறுதி அஞ்சலிகளைச் செலுத்துமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றார்கள். சமயச் சடங்குகள் அதன்பின் ஆரம்பமாகும். அஞ்சலிக் கூட்டமும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகி அன்னாரின் புகழுடல் தகனத்துக்காக மாலை 3 மணிக்கு திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சம்பந்தனின் இறுதி நிகழ்வு இன்று - ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு. தமிழ்த் தேசிய இனத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி நிகழ்வு தமிழர் திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.சம்பந்தனின் புகழுடல் அவரது  திருகோணமலை இல்லத்தில் நேற்றுமுன்தினம் தொடக்கம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு முன்பாக இறுதி அஞ்சலிகளைச் செலுத்துமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றார்கள். சமயச் சடங்குகள் அதன்பின் ஆரம்பமாகும். அஞ்சலிக் கூட்டமும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகி அன்னாரின் புகழுடல் தகனத்துக்காக மாலை 3 மணிக்கு திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement