• Feb 11 2025

சம்பந்தனின் பூதவுடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி..!

Chithra / Jul 7th 2024, 11:15 am
image

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுனாவின் பொது செயலாளர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் கடந்த 30ஆம் திகதி இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் காலமானார்.

அவரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதி கிரியைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், எஸ். சிறீதரன், இம்ரான் மஹ்ரூப் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள், கட்சி போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.


சம்பந்தனின் பூதவுடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பிரமுனாவின் பொது செயலாளர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் கடந்த 30ஆம் திகதி இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் காலமானார்.அவரின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதி கிரியைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை தலைவர் சண்முகம் குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், எஸ். சிறீதரன், இம்ரான் மஹ்ரூப் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள், கட்சி போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement