• Dec 27 2024

சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம்; பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராய்வு..!

Sharmi / Dec 24th 2024, 9:40 pm
image

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(24) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் ஒருங்கிணப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி சமூக வகூவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ,பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.மஞ்சுல ரத்னாயக்க,எம்.எஸ் உதுமாலெப்பை,எம்.ஏ.எம் தாஹீர்,கே.கோடிஸ்வரன்,ஜனாதிபதி சட்டத்தரணி எம் நிசாம் காரியப்பர், அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக அபேவிக்ரம,மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர்,பிரதம கணக்காளர்,ஏ.எல் மஹ்ரூப்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், ஜமாலியா பாடசாலை மாற்று காணி விடயம்,மாவடிப்பள்ளியில் உடனடியாக பாலம் அமைப்பது சம்மந்தமான தீர்மானம்,விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள், நீர்ப்பாசன  பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும் தீர்வுகளும்,  கலந்தாலோசிக்கப்பட்டு  முடிவுகளும் எடுக்கப்பட்டன.




சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம்; பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராய்வு. சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(24) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் ஒருங்கிணப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி சமூக வகூவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ,பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.மஞ்சுல ரத்னாயக்க,எம்.எஸ் உதுமாலெப்பை,எம்.ஏ.எம் தாஹீர்,கே.கோடிஸ்வரன்,ஜனாதிபதி சட்டத்தரணி எம் நிசாம் காரியப்பர், அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்திக அபேவிக்ரம,மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஏ.பி.எம் சாஹீர்,பிரதம கணக்காளர்,ஏ.எல் மஹ்ரூப்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், ஜமாலியா பாடசாலை மாற்று காணி விடயம்,மாவடிப்பள்ளியில் உடனடியாக பாலம் அமைப்பது சம்மந்தமான தீர்மானம்,விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள், நீர்ப்பாசன  பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும் தீர்வுகளும்,  கலந்தாலோசிக்கப்பட்டு  முடிவுகளும் எடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement